பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

செந்தமிழ் பெட்டகம்

-பிற்காலத்து நூல் எனக் கூறுவர் சிலர் சொற்கள் சில வேறுபட்டிருத்தல் உண்மையே சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய நூலில் அவ்வேறுபாடு இருத்தல் இயற்கையே, தவிர, சங்கப்பாட்டுக்கள் திணை, துறை, முதலிய வரையறை உடையவை அவற்றின் மரபும் இயல்பும் வேறு பொதுமக்களின் வழக்கில் இருந்த சொற்களும் சொல் வடிவங்களும் அவற்றில் அமைந்த கதை. ஆதலின், அச்சொற்களும் சொல் வடிவங்களும் அவற்றில் இடம்பெறல் அரிது சிலப்பதிகாரம், நாடகப்போக்கில் அமைந்த கதை, ஆதலின், அச்சொற்களும் சொல் வடிவங்களும் இந்நூலில் எளிதில் இடம் பெற்றன

இதில் உள்ள சில நிகழ்ச்சிகளும் கதைகளும்வேறு சில நூல்களிலும் திரிந்தும் திரியாமலும் காணப்படு கின்றன


       “எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
       குருகார் கழனியின் இதனத் தாங்கண்
       ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி"

என்று நற்றிணையில் (பாட்டு-216-ல்) கூறப்படும் திருமாவுண்ணியும் கண்ணகியும் ஒருத்தியே என்று சிலர் கொள்வர். அவ்வாறு கொள்ளவேண்டிய காரணம் இல்லை. ஒரே வகையான நிகழ்ச்சி வேறுகாலத்திலும் வேறு இடத்திலும் நிகழ்ந்திருத்தல் கூடும் அன்றிப் பிற்கால நிகழ்ச்சி பற்றிய செய்தியில், பழைய நிகழ்ச்சி பற்றிய செய்தி கலந்து குழைந்து போதலும் உண்டு நீண்ட கதையாக உருவாகும் காவியத்தில், கதை நிகழ்ச்சிகள் பல இவ்வாறு கலப்புறுதலை மற்ற நாட்டுக் காவியங்களிலும் காணலாம் காவியங்களின் வரலாற்றை ஆராய்வோர், ஒரு நாட்டில் அதற்கு முன் வழங்கிய பல கதைகளின் கூறுகளும் சேர்ந்து கலந்து ஒரு நீண்ட தொடர்கதையாக அமைவதுண்டு என்பர்

கீரிப்பிள்ளையைக் கொன்ற மறையோன் மனைவியின் கதை (15 : அடைக்கலக்காதை, 54-75),