உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

செந்தமிழ் பெட்டகம்

சீவகன் தக்க நாட்டின் தலைநகராகிய கேமமாபுரத்தை அடைந்து, அந்நகர வணிகனாக சுபத்திரன் என்பவனால் உபசரிக்கப்பட்டு, அவன் இல்லத்தை அடைந்தான் கேமசரி என்பவள் அவ் வணிகன் மகள் அவளுக்குச் சாதகங் கணித்த சோதிடர், அவள் எவனைக் கண்டு நாணமடைகின்றாளோ, அவனே அவளை மணத்தற்குரியவன் எனக் கூறியிருந்தனர் அதற்கு இயைய அவள் சீவகனைக் கண்டு நாணியTதுடன் அவனைப் பெரிதும் காதலித்தனள் அது கண்ட வணிகன் அவளைச் சீவகனுக்கு மணம் புரிவித்தான்.

சீவகன் அவளுடன் இரு திங்கள் இன்புற்றிருந்து, பின்பு அவளை விட்டுப் பிரிந்து, வழியிற் சந்தித்த ஒருவனுக்குத் தன் ஆடையணிகளைத் தந்து, அவனுடைய ஆடையணிகளைப் பெற்றுத் தான் தரித்துக்கொண்டு சென்றான்.

ஏமமாபுரம் என்பது மத்திம தேயத்துத் தலைநகரம் சீவகன் அந்நகர்ப் புறச்சோலையை அடைந்து, குளக்கரையிலமர்ந்து, காந்தருவதத்தையையும் குணமாலையையும் நினைந்து வருந்தியிருந்தான். அந்நகரத்தரசன் மகன் விசயன் என்பவன், அச்சோலையை அடைந்து, ஒரு மாமரத்தின் உச்சிக்கிளையிலிருந்த கனியை அம்பால் எய்து வீழ்த்தப் பல முறை முயன்றும் இயலாது வருந்த, சீவகன் அதனை ஒர் அம்பெய்து வீழ்த்தி, அவனுக்கு நண்பனாயினன் அவன் வில்லாற்றலைக் கண்டு வியந்த விசயன், அவனை அழைத்துச் சென்று தன் தந்தையாகிய தடமித்தனுக்கு அறிமுகம் செய்வித்தான். தடமித்தன் தன் மைந்தர் ஐவர்க்கும் சீவகனையே வில்லாசிரியனாக்கினன். சீவகன் விரைவில் அவர்களை வில் வித்தையில் வல்லவர்களாய்த் திகழச் செய்தான் அது கண்டு வியந்த தடமித்தன், தன் மகளாகிய கனகமாலை என்பளைச் சீவகனுக்கு மணமுடித்து மகிழ்ந்தான்.

சீவகனைப் பிரிந்து ஆற்றாத நந்தட்டன், காந்தருவதத்தையின் மந்திர ஆற்றலால், அவனிருக்கு