பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

செந்தமிழ் பெட்டகம்


சாகரதத்தன் கடையில் விலையாகாமல் தேங்கியிருந்த பொருள்கள் அவன் மகளுக்குரிய கணவன் கடையில் வந்து தங்கும்போது விலையாகும் என்று சோதிடர் கூறியிருந்தனர் சீவகன் வந்ததும் அங்ஙனமே நிகழ்ந்தது அதையறிந்த சாகரதத்தன் சீவகனை உபசரித்து, அவனுக்குத் தன் மகளை மணமுடித்தனன்

சீவகன் சோலையில் தங்கியிருந்த தன் தோழரை மணக்கோலத்துடன் அடைந்து நிகழ்ந்ததை நவில, தோழர் அவனைக் 'காமதிலகன்’ என்று கொண்டாடினர் அது கேட்ட புத்திசேனன் என்னும் தோழன், "சீவக, இந்நகரில் உள்ள சுரமஞ்சரி என்பவள் ஆடவரைக் கண்ணெடுத்தும் பாராது நோன்பியற்றுகின்றாள். நீ அவளை மயக்கி வயப்படுத்த வல்லையாயின் நானு முன்னைக் காம திலகன் எனப் பாராட்டுவேன்” என்றான்

சீவகன் அங்ஙனமே செய்வதாகக் கூறி, புத்தி சேனனைக் காமன் கோட்டத்தையடைந்து காமன் படிவத்தின் பின்னே மறைந்திருக்கக் கட்டளையிட்டுக் கிழ அந்தணன் வடிவங் கொண்டு சுரமஞ்சரியின் கன்னிமாடத்தை அடைந்தான் கன்னிமாடக் காவற் பெண்டிர் அவன் முதுமைக்கிரங்கிச் சுரமஞ்சரிக்கு அவன் வருகையைத் தெரிவித்தனர் சுரமஞ்சரி அவனை அழைத்து உபசரித்து விருந்திட்டுப் பஞ்சணையில் துயிலச் செய்தனள் அவன் பஞ்சணையிற்படுத்து இனிய இசை பாட, அஃது அனைவரையும் வியப்பித்தது

அவ்விசை கேட்ட சுரமஞ்சரி, "இவ்விசை சீவகன் இசையைப் போன்று இன்பம் பயக்கின்றது யான் நாளைக்குக் காமன் கோட்டம் சென்று சீவகனை விரைவில் எனக்களிக்குமாறு காமனை வேண்டுவேன்” எனக் கூறி, அடுத்த நாள் அந்தணனையும் தோழியரையும் உடன் கொண்டு காமன் கோட்டத்தை அடைந்தாள் அவள் கிழவனை ஓரிடத்திருத்திக் காமனைத் தொழுது, சீவகனைத் தனக்குத் தருமாறு வேண்ட, அங்கு