பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

277

திருவாசிரியம், பெரியதிருவந்தாதி என்ற நான்கு திவ்யப் பியபந்தங்ககளால் உலகோருய்ய அருளிச் செய்து, இளம் பருவத்தே அவாவற்று வீடு பெற்றருளினார்

இவர் காலம் ஏழு முதல் ஒன்பது வரையுள்ள நுாற்றாண்டுகட்கு இடைப்பட்ட காலமெனக் கொள்ளத்தகும் 10 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீமத் நாதமுனிகள் என்ற ஆச்சாரியார் தலைவர் திருவாய் மொழிக்கு இயல்,இசைகள் வகுத்து பிரபலம் பெறச் செய்தனர்

சடகோபாலருக்கு மாறன், பராங்குசன் என்ற வேறு திருநாமங்களும் உண்டு மாறன் என்பது இவர் தந்தை பெயருடன் இணைந்து காரிமாறன் எனவும் வழங்கும் ஆழ்வார்களுள் தலைமையும் பெருமையும் உடையவரானதால் நம்மாழ்வார் என்ற திருநாமம் இவருக்கு சிறப்பாக உரியதாயிற்று

இவ்வாழ்வாருடைய அருளிச் செயல்களில் திருவாய்மொழி சிறப்பாக போற்றப்படுவதாகும் இத் திவ்ய பிரபந்தத்துள் இறைநிலை, உயிர் நிலை, உபயநிலை, விரோதி நிலை, புருடார்த்த நிலை என்ற ஐந்தனுண்மைகளும் கூறப்பட்டுள்ளன. இந்த அர்த்தபஞ்சக ஞானமே முத்தியடைவிக்க வல்லது என்பர் சமய நூாலோர் இவற்றுள் இறைநிலையில் வேதவேதாந் தங்களால் முடிவாக எடுத்துரைக்கப்பட்ட பரம்பொருள் திருமாலே என்பது இவர் தம் துணிபு அப்பரமான்மா, தன்போல நித்தியமாயுள்ள சித்து (அறிவுடைப்பொருள்), அசித்து (அறிவில் பொருள்) என்ற இரண்டினையும் தன் அவயவங்களாகக் கொண்டு இணைந்து, சிருஷ்டி, திதி இலயங்களை நிகழ்த்திய வண்ணம் எல்லாக் கரணங்களும் தானேயாகி உள்ளது. அது தூலமாய் விரிவும் நிலையே படைப்பு என்றும், சூக்கும மாய்ச் சுருங்கும் நிலையே இலயம் என்றும், இவற்றின் இடைப்பட்டதே காப்பு என்றும் கூறப்படும்