பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

செந்தமிழ் பெட்டகம்

பழைய புலவர் மரபை மாற்றி, அவற்றை உத்தமமான பகவத்விஷய காமமாக்கிப் பரமனிடம் காதல் பெருகப் பாடும் முறைக்கு வழிகற்பித்தவர்களுள் நம்மாழ்வாரும் ஒருவர் ஆவர் பகவானைத் தலைவனாகவும், சீவான் மாவைத் தலைவியாகவுங் கொண்டு, அகப்பொருள் நயங்கள் அமைய ஆழ்வார் பாசுரங்கள் பலவும் விளக்குகின்றன

பரம்பொருளான திருமாலை, சாம்ராச்சிய சக்கரவர்த்தியாகக் கொண்டு ஆழ்வார் கூறும் அரிய செய்தியொன்றும் இங்கே குறிப்பிடத் தகும் ‘சாம்ராச்சியக்கொள்கை' என்றால், அது ஈசனதேயாயினும், ஆட்சிக்கேடுகள் உடையதுதானே அம்முறையில் பகவான் ஆட்சியிலும் அமைந்த குறைகள் பல அப்பிராகிருதமான பரலோகத்து ஆன்மாக்களை மாயாபந்தம் அற்றவராகவும், அதனால் அந்தமிலின்பமான சுதந்தரம் பெற்றவராகவும், செய்து பரமபிராகிருத லோகத்தவரான தேவர்மனிதர் முதலிய ஆன்மாக்களை மாயைவசப்படுத்திப் பெருந்துயரங்களில் ஆழ்த்துகிறான் இத்தகையை ஆட்சியில் நீதிகளை எடுத்துக் கூறுவாரைப் பல்வகையினும் சோதிக்கிறான் அச்சோதனைக்குத் தளராது நிற்பவரானால், அவர்க்குவீடாகிய பதவியளித்துத் தன் வசப்படுத்தி விடுகிறான் இவை யாவும் அவன் மாய மயக்குக்களே, இம்மயக்கெல்லாம் நீக்கி, ஆன்மாக்களுய்யுமாறு செய்யும் திருவுள்ளம் தம் பெருங்கருணையால் நம்மாழ்வார்க்கு உண்டானது அதை இவர் தம்போன்ற பெத்தான்மாக்களுக்கு உபதேசிக்கலாயினர் மேலே கூறியபடி, பிராகிருத லோகத்தவரை சமய பேதங்களால் பிளவுபடும் படி செய்துவரும் ஈசனது மாயமெல்லாம், தன் தத்துவ நிலையை அறியாமல் உலகோர் மயங்கும்படி வைத்த உபாயங்களே என்றும், இவ்வுண்மையுணர்ந்து ஆன்மாக்கள் தன்னை ஒருமிக்கப் பற்றுவராயின், நித்தியமாகத்தான் திருவிளை யாடல் புரிதற்கு வகுத்துக்