பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முத்தமிழ்
தொன்னூல் விளக்கம்

து பழைய இலக்கணங்களை விளக்கமாகக் கூறும் ஓர் இலக்கண நூல் இதனை இயற்றியவர் இத்தாலியிற் பிறந்து, தமிழ் நாட்டிற்கு 1708-ல் வந்தவராகிய வீரமாமுனிவர் தமிழ் பயின்றபின், கிறிஸ்தவ சமயச் சார்பான தேம்பாவணி முதலிய பல இலக்கிய நூல்களை இயற்றினார். பின்னர், இத்தொன்னூல் விளக்கத்தை எழுதினார்; எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியாகிய ஐந்திலக்கணங்களும் இந்நூலுள் அமைந்திருத்தலால், இந்நூலுக்கு 'ஐந்திலக்கணத் தொன்னூல்' விளக்கம்'எனப் பெயரிட்டனர்

இந்நூலுக் குரிய தெளிவான உரையையும் பல விளக்கமான எடுத்துக் காட்டுகளுடன் இந்நூலாசிரியரே வரைந்துள்னர். இவர், அகத்தியம்,தொல்காப்பியம், வீரசோழியம், நன்னூல், யாப்பருங்கலம், வெண்பாமாலை, தண்டியலங்காரம், இலக்கண விளக்கம், இலக்கணக்கொத்து,பிரயோக விவேகம், முத்துவீரியம் முதலிய இலக்கணங்களையும், சங்க நூல்கள், சிந்தாமணி, கம்பராமாயணம் முதலிய இலக்கியங்களையும் செம்மையாகப் பயின்றவர் என்பது தெரிகிறது. இவர் வடமொழி இலக்கணங்களைச் சிற்சில இடங்களில் ஒப்புமை காட்டிச் செல்வதனால், இவர் வடமொழியையும் தெளிவுடன் பயின்றவராகக் காணப்படுகின்றார்