பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

செந்தமிழ் பெட்டகம்

நிரனிரையாகக் கூறி, எனவும் மேற்கோள் காட்டியுள்ளார்

நன்னூலார், ‘தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம் மூன்றும் மொழி மூவிடத்துமாகும்’ என்று விகாரத்தை மூன்று வகைப்படுத்தினர் முனிவர், ‘திரிபு, அழிவு ஆக்கம், திரட்டு நால்விகாரம்’ (கு 21) என்று திரட்டு விகாரம் ஒன்றையும் வட நூல் கருத்தைத் தழுவிச் சேர்த்துக்கொண்டார்; இங்கே வடமொழிப் புலமையைக் காட்டுவதற்காகத் ‘திரிதல் = ஆதேசம், கெடுதல் = உலோபம்; மிகுதல் = ஆகமம், கலத்தல் = சங்கீரணம் என வடநூலார் கூறுவர்' எனக் காட்டியுள்ளார், தீர்க்கசந்தி, குணசந்தி, விருத்திசந்தியாக வருவனவே திரட்டு-கலத்தல்-சங்கீரணம் எனப்படும் நன்னூலார், இடையுரி வடசொலின் இயம்பிய கொளாதவும் உணர்தல் யாவர்க்கும் நெறியே என்றார் இங்கே வடசொலின் என்ற நன்னூலார் கருத்தையும், முத்துவீரியம் மொழியியலுள்ள 26 ஆம் நூற்பா முதல் 44 ஆம் நூற்பாவரைக் கூறியுள்ள கருத்துகளையும் தழுவி,


    “இருமொழி ஒருமொழியெனச் சங்கீர்தமாய்
    நிலைமொழி யிற்றுயிர் நீங்கலும்,
    அதனோடு அணைமொழி முதற்கண், அ ஆ ஆதலும் இ ஈ ஏ
    ஆதலும் உ ஊ ஆதலுமாம்"

என மூன்று சந்திகளுக்கும் சுருக்கமாக ஒரு சூத்திரத்தை அமைத்துக் காட்டினர் முனிவர் ; இன்னும், ‘சிவனைப் பணிவோன் சைவன் எனத் தனிமொழியில் முதலெழுத்துத்திரிவது ஆதிவிருத்திசந்தி எனக் கொள்க’ என உரையில் காட்டியுள்ளார் இவர் கூறும் எழுத்ததி காரம் சுருங்கிய நூலாகையால் இவர் கூறாது விடுத்த புணர்ச்சி விதிகளுக்கு இவ்திகார இறுதிச் சூத்திரத்தின் உரையில், நன்னூலிலிருந்து 38 சூத்திரங்களை மேற்கோளாக எடுத்தாண்டு இவ்திகாரத்தை முடித்துக் கொள்ளுகின்றார்