பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

295


சொல்லதிகாரம் :

ஆகுபெயர், தொல்காப்பியத்தில் 12 என்றும் காண்கின்றோம் முனிவர் முதல், சினை,கருவி, காரியம், பண்பாகிய ஐந்தாகுபெயர்களைச் சிறப்பாகக் கொள்ளுகின்றனர் (சூ49) மேலும், இதன் உரையில் சில நூலாசிரியர் ஆகுபெயர் பன்னிரண்டும் பிறவுமா மென்றுங் கூறுவர்” என்பதனையும் வரைந்து, இவற்றிற்கும்மேற்கோள் தந்துள்ளார் ஆகுபெயருக்குக் காரணம் கூறும்போது, காரணங்காட்டாது, அதன் பயன் கொள்ளுவது ஆகுபெயர்’ (கு54) என்கின்றார், ஒன்று முதல் எட்டு வேற்றுமைகளைக் கூறும்போது, ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியில்,இவ்வேற்றுமைகளை முறையே, ‘கருத்தா, கர்மம், கரணம், சம்பிரதானம், அபாதானம், சேஷார்த்தம், அதிகரணம், சம்யோதனம் என வட நூலார் கூறுவர் என்று வட நூலுடன் ஒப்பிட்டுக் காட்டுடிகின்றார்

வீரசோழியம், பிரயோக விவேகம், முத்துவீரியம் ஆகிய இலக்கண நூல்களில் கூறியுள்ள வடநூல் இலக்கணக் கருத்துகளைத் தழுவித் தமிழ் நூல்களில் வந்து வழங்கும் வடசொற்களுக்கு விதிகளையும் (சூ86) கூறுகின்றார் இவ்வாறு கூறும் இச்சூத்திரத்தில் “இன்னாருக்கு மகன் இவன் என்னும்போது, “ஏயன்’ என்னும் பிரத்தியயம் - விகுதி புணர்ந்து, கார்த்திகையின் மகன் என்பது, கார்த்திகேயன் என்றாகும்” என்பது போன்ற பல வடசொல் மேற்கோளைக் காட்டித் தெளிவுபடுத்தி விளக்குகின்றார் மேலும், பிர, அப, அபி, பபி, அப முதலிய 18 உபசர்க்கங்களைச் சொற்களில் அமைத்துக் காட்டும் பான்மை சிறந்த பயனுள்ளதாகத் தோன்றுகிறது

எதிர்மறையைக் காட்டும் பகுபதத்தில், வருமொழி முதலில் உயிரானால், நிலைமொழியாக,'அன்’ என்னும் எதிர்மறைச் சொல் வரும் என்பது முனிவர் கருத்து “எதிர்மறைப் பகுபதத்தியைந்த மொழி முதல்