பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

செந்தமிழ் பெட்டகம்

இவ்வெட்டின் வழியாக அகத்திணைப் பொருள் (சூ158) தோன்றும் என்கின்றார் முனிவர் ஒழுக்கம், நூல், புறக்கரி ஆகிய மூன்றின் வழியாகப் புறத்திணைப் பொருள் (சூ161) பிறக்கும் என்கின்றார் நெருப்பை-வன்னியைக் கொண்டு யாகத்தைப் புரிவதால், அந்தணரை, இடுகுறிக் காரணப்பெயராக,'வன்னியர்’ என்று நால்வகை வருணத்தாரைக் குறிப்பிடும்போது (சூ183) கூறுகிறார்

மொழிக்கு உரிமையைப் பற்றிக் கூறும்போது, முத்துவீரியர் கருத்துகளைத் தழுவி (முத்து - எழு-மொழி. 26-30) தேவர் மொழியை, ‘சனுக்கிரகம்’, சங்கதம்’ என்றும் இழிசினர் மொழியை, அவப்பிரஞ்சம்’ என்றும், எல்லா நாட்டிலும் எல்லாராலும் வழங்கும் மொழியை, ‘பாகதம்’ என்றும், இப்பாகதம்,தற்பவம், தற்சமம், தேசிகம் என மூன்று வகைப்படும் என்றும் (சூ191) கூறிவிட்டு, இவற்றின் பொருளை உரைப்பகுதியில் பல எடுத்துக்காட்டுக்களுடன் தெளிவுபடுத்துகின்றார் இந்நூலாசிரியர்

நம்பி அகப்பொருளுள் அகத்திணையியலில் கூறியுள்ளவாறு, ஐந்திணைக் கருப்பொருளைக் கூறிவிட்டுத்தாம் எடுத்துக்கொண்ட அகத்திணையைச் சுருக்கி முடித்துக்கொள்கின்றனார் முனிவர் பின்னர், நன்னூலுள் சொல்லதிகாரத்தில் கூறியுள்ள இருவகை வழக்கு (கு 194), பத்துவகைக் குறிப்புச் சொல் (கு 195), மரபுச் சொல் (கு 197), அடுக்குத் தொடர் (சூ198) ஆகிய பொருள்களைத் தாமியற்றும் பொருளதிகாரத்தில் அமைத்துக் கொண்டார் இவ்வாசிரியர் இன்னும் புறத்திணையானது வெட்சி முதல் தும்பையிறுதியாக எழுவகைப்படுதலுமாகும் என்று கூறிவிட்டு, அதன் உரைப்பகுதியில் வெண்பா மாலையிலிருந்து பல செய்யுட்களை மேற்கோளாகக் காட்டி இப் புறத் திணையை முடித்துக்கொள்கின்றார் இப்புலவர்