பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

செந்தமிழ் பெட்டகம்

சில நீக்கியும், சில புதிய அணிகளைச் சேர்த்தும் 30 வகையாகப் பொருளணியியலை முடித்துக்காட்டுகின்றார் தண்டியார் பல அணிகளுக்கு விளக்கங்கூறாமல் அவற்றின் பெயர்களைமாத்திரங் கூறியுள்ளார் முனிவர், ஒவ்வோரணிக்கும், ’இதரேதரம் என்ப இரு பொருள் மாறலே’ (சூ 531) என்பது போன்ற விளக்கமுங்கூறிச் செல்லுகின்றனர்

தற்குறிப்பேற்ற அணியினை, ’ஊகாஞ்சித அணி (சூ 346) என்று கூறி, அவ்வாறு கூறுதற்குரிய காரணத்தையும் இவர் காட்டுகின்றார் பிறிதோரிடத்தில், ‘விடையில் வின அணி‘ (சூ 362) என்றும், ’வினவில் விடை அணி’ (சூ 363) என்றும் கூறுவன சிறப்பாகத் தோன்றுகின்றன இறுதியில், ’எழுத்துச் சொற்பொருள் யாப்பணி என்றிவண், வழுத்திய ஐம்பொருள் வழக்கம் சுருக்கித் தொன்னூல் நடையொடு முத்தமிழ்த் தொன்னூல் விளக்கம் துளக்கிய வாறே’ (சூ 370) என்று கூறி இத்தொன்னூல் விளக்கத்தை முடிக்கின்றார் வீரமாமுனிவர்