பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

செந்தமிழ் பெட்டகம்

சிறப்புற்று, தற்கால நிலையிலே கம்பன் பிள்ளைத்தமிழ், மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மங்களாம்பிகை, சேக்கிழார், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் நூல்களாலும் காந்தி பிள்ளைத்தமிழ் அளவாக வளர்ந்திருக்கக் காண்கிறோம் முகம்மதியக் கவிகளும் நபிநாயகப் பிள்ளைத் தமிழ், முகைதீன் பிள்ளைத் தமிழ், ஆண்டவர் பிள்ளைத் தமிழ் போன்ற நூல்களின் மூலம் இப் பிரபந்த வகையை வளர்த்தனர்

பிள்ளைத் தமிழில் சிறப்பாக உள்ள சில நூல்களின் திறத்தை நோக்கும்பொழுது, முதல் நூலாகக் கிடைப்பது இரண்டாம் குலோத்துங்கனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு ஒட்டக்கூத்தரால் பாடப் பட்ட குலோத்துங்கன் பிள்ளைத் தமிழாகும் இந் நூலாசிரியர், நூல் முழுவதும் நல்ல சந்தங்களைக் கையாள்கிறார் சந்த முறைகளோடு படிக்கும்பொழுது நூலின் சிறப்பு விளங்குகிறது ஏனைய நூலாசிரியர்களெல்லாம் இவருடைய சந்த அமைப்பைப் பின்பற்றியிருக்கக் காண்கிறோம்

தமிழிலக்கியங்களிலே வரலாற்றுக்குத் துணை புரியும் நூல்கள் மிகச் சிலவே அந்நிலையிலே இந்நூல் பெரிதும் துணை புரிகிறது இராசாதி ராசன், இராச ராசன், இரண்டாம் இராசேந்திரன் போன் றோர்கள் செய்த பெரும் போர்களும், அவர்களோடு குலோத்துங்கனுக்கமைந்த உறவு முறைகளும் தெளி வாகக் கூறப்பட்டுள்ளன

பிள்ளைத் தமிழென்றவுடனேயே தமிழ் பயில்வார் நினைவுக்கு வருவதெல்லாம் குமரகுருபர சுவாமிகள் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழும், முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழுமாகும் நூலாசிரியர் தமிழினிடத்தே தெய்வத்தன்மையைக் கண்டதையும், பாராட்டும் தெய்வங்களையெல்லாம் தமிழ்த் தொடர்பும், தமிழின்பால் வேட்கையுமுடையவர்களாகக் கூறு வதையும் காண்கிறோம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் வருகைப் பருவத்தமைந்த, தொடுக்குந் கடவுட்-