பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

33

தொடங்கினர் அம்முயற்சி முற்றுப் பெறவில்லை. அச்சில் வந்துள்ள வேறு சில நிகண்டுகள் மீண்டும் ஆராய்ந்து பதிப்பிக்கும் நிலையில் உள்ளன இலக்கியங்களிற் போலவே, வெண்பா, ஆசிரியம், விருத்தம், கட்டளைக் கலித்துறை முதலிய பாக்களில் எல்லாம் நிகண்டு நூல்களைச் செய்ய முயன்ற புலவர் பெருமக்களின் முயற்சிகளை அழியாது பாதுகாத்தல் மிகமிக அவசியம் தமிழ் மொழியின் சொற்பொருள் வரலாற்றைத் தெள்ளிதின் உணர, இந்நிகண்டு நூல்களைப் போற்றிக் காத்தல் தமிழ் மக்களின் முதற் பெருங்கடனாம்.

கால அடைவில் அகரமுதவிகள்
காலம் நூல் ஆசிரியர்
1732 சதுரகராதி வீரமாமுனிவர்
1919
1924 சதுரகராதி அச்சு வீரமாமுனிவர்
1779 பெப்ரிசியசு அகராதி பெப்ரிசியசு
1834
2837 ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) ராட்லர்
1839
1841
1842 மானிப்பாய் அகராதி யாழ்ப்பாணம், சந்திரசேகர பண்டிதர் மற்றும் சரவண முத்துப்பிள்ளை.
1843 நிகண்டு-வேதகிரியார் சூடாமணி களத்துர் வேதகிரி முதலியார்
1850 சொற்பொருள் விளக்கம் அண்ணாசாமிப் பிள்ளை
1862 வின்சுலோ - தமிழ் அகராதி வின்சுலோ
1869 போப்புத் தமிழ் அகராதிச்சுருக்கம் ஜி.யு.போப்பு
1883 அகராதிச்சுருக்கம் விஜயரங்க முதலியார்





செ பெ- 3