பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

செந்தமிழ் பெட்டகம்

சொல்லாக்கம், “இராமன் சோறு உண்டான்” என்பது போன்ற சொற்றொடரமைப்பு அல்லது சொற்றொடராக்கம், “இராமன், இராமனை” முதலியன போன்ற உருபு அமைப்பு அல்லது உருபு ஆக்கம் என மூன்றாக அடக்கி மேனாட்டர் ஆராய்வர்.

மொழி, பேச்சாக எழுவது: எழுத்து, அதன் மாற்று வடிவம் ஆதலின் மொழி ஒரு நிகழ்ச்சி, அல்லது ஒரு செய்தி, இலக்கணம் அதனை உள்ளவாறு விளக்கினாற் போதும், ஆனால்,கொள்கைக்கேற்ப இந்த விளக்கம் மாறுபடுவது நம் மனத்தின் இயல்பு பலவகையாக வரும் மொழிச் செய்திகளையும் ஒரு கொள்கையும் இன்றி முழு நிலையாக விளக்க முடியாது விஞ்ஞான வழக்கின் படியே இவற்றைக் கோவை செய்து வகைப்படுத்தி முறை காண வேண்டும்

ஒரு மொழியோடு ஒரு மொழியை ஆராயும் ஒப்புமை ஆராய்ச்சி முறை இவ்வாறு எழுகின்றது ஒரு காலத்தில் ஒன்றுபோலத் தோன்றுவன பிற்காலத்தில் ஒரு தொடர்பும் இல்லாதவையாய்ப் போகலாம் தமிழ் “அஞ்சு” வட மொழி பஞ்ச என்பது போலத் தோன்றினாலும், 'பஞ்ச' என்பது ‘கவிங்க’, ‘பீன்ப்’ போன்று முன் இருந்ததனையும், 'அஞ்சு' என்பது ‘ஐந்து’ ‘ஐது’, ‘ஐ’ என்றெல்லாம் இருந்ததனையும் ஆராயும் போது இவற்றின் ஒற்றுமை மறைகிறது பிறமொழிகளிலிருந்து கடன் வாங்கி வழங்கப்பெறும் சொற்களும் உண்டாதலின் ஒரு மொழியில் பிறமொழிச் சொற்கள் இருப்பதால் மட்டும் பிறமொழியாகிவிடாது ஆகையால் பழைய வடிவங்களை ஆராயவேண்டும் என்பதாயிற்று இதுவே வரலாற்று முறை ஆராய்ச்சி ஒப்பிலக்கணங்களும் வரலாற்றிலக்கணங்களும் என்ற இவை இரண்டும் சேர்ந்த வரலாற்று ஒப்பிலக்கணங்களும் தோன்றி வருகின்றன. இன்று இந்திய ஐரோப்பிய மொழிகளே இவ்வாறு பரக்க ஆராயப்பெற்றுள்ளன