பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

77

ஒத்திருக்கவில்லை அவ்வாறே, முன்னிலை ஒருமை இடப் பெயரில் நீ அல்லது நீன் திராவிட மொழிகளுக்குப் பொதுவாக அமைந்த சொல் இதனோடு சமஸ்கிருதத்திலுள்ள துவம் ஒத்திருக்கவில்லை அவன், அவள், அவர், அது, அவை ஆகிய ஏனைய இடப்பெயர்களில் திராவிட ஒலி இலக்கண இயல்பிற்கு ஏற்பத் திராவிட மொழி ஒவ்வொன்றிலும் சிறிது சிறிது வேறுபாடு விளைந்துளது

சுட்டுப் பெயர்கள் எல்லாம் சேய்மைச்சுட்டு, அண்மைச்சுட்டு, இடைநிலைச்சுட்டு என வழங்குகின்றன இவற்றிற்கு அடிப்படையாக நிற்கும் ஒலிகள் முறையே அ அல்லது ஆ இ அல்லது ஈ உ அல்லது ஊ அவ்வாறே வினாப் பொருளில் எகாரம் அல்லது ஏகாரம் பயன்படுகிறது

வினைச் சொற்கள் தன்வினை எனவும் பிறவினை எனவும், செயப்படு பொருள் குன்றிய வினை, குன்றாவினை எனவும் பிரிக்கப்படும் வடமொழியிற் காணப்படுமாறு போல ஆத்மநேபதம், பரைஸ்மபதம் என்ற வழக்குக்கள் இம்மொழிகளிலே இல்லை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூன்று காலங்களில் வகுக்கப்பட்டிருக்கின்றன. இறந்த காலத்தின் இடைநிலையாக ‘த்’ என்பதும், நிகழ்காலத்தின் இடைநிலையாக ‘கின்று' அல்லது 'கிறு’ என்பதும், எதிர்காலத்தின் இடைநிலையாக ‘ப்’ அல்லது ‘வ்’ அல்லது ‘க்’ என்பதும் வழங்குகின்றன சார்வு, செல்வு, வாழ்வு என்ற தொழிற்பெயர்களின் அடியாகச் சார்வேன், செல்வேன், வாழ்வேன் போன்ற வினைமுற்றுச் சொற்கள் தோன்றின என்பது ஒரு சாரார் கொள்கை செய்தென் எச்சங்களும், செயவென் எச்சங்களும், செய்தேல் எச்சங்களும், செய்க என்ற வாய்பாடுகளும் திராவிட மொழிகளிற் பொதுவாக வழங்குவன

திராவிட மொழிகளின் தொடரிலக்கணம் பொதுவாக ஒத்து அமைந்துள்ளது தொடர்களிற்-