பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

செந்தமிழ் பெட்டகம்

என்று வழங்கும் என்பதாகும் இவ் விபாவ அனுபாவங்களால் வெளிப்படுகின்ற ஸ்தாயி பாவுமே ரஸம் என்னும் பெயர் பெறும்

மேற்கூறிய விபாவம் இரண்டு வகைப்படும் காதல் முதலாயின தோன்றுவதற்குச் சார்பாயிருக்கும் பொருள் ஆலம்பன விபாவம் எனப்படும் தோன்றிய காதல் முதலியவற்றை வளர்த்து விளங்கச் செய்வது உத்தீபன விபாவம் எனப்படும் காதலுக்குத் தலைவன் தலைவியர் ஆலம்பன விபாவம் அவர்களுடைய உருவின் சிறப்பு, அணிகலன் முதலியனவும், தென்றல், நிலா, கடலொலி முதலியனவும் உத்தீபனவிபாவம் இனி, காரியமாகிய அனுபாவமும் அகத்தது, புறத்தது என இரண்டு வகைப்படும் அந்தக்கரணத்தைச் சார்ந்தனவாகிய ஸ்தம்பம், பிரளயம் முதலியவை முதற்பிரிவிற்குரியவை அவை சாத்துவிக பாவம் எனப்படும் கடைக் கண்ணோக்குதல் முதலிய செய்கைகள் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவை காதல் முதலிய ஸ்தாயி பாவங்களைத் துணைக்காரணமாய் நின்று வளர்க்கின்ற நலிவு, நினைவு, விரைவு முதலியன சஞ்சாரிபாவம்

உதாரணமாக துஷ்யந்தனுக்குச் சகுந்தலையும், சகுந்தலைக்குத் துஷ்யந்தனும் காதலுக்கு ஆலம்பனம் அக் காதல் தென்றல், நிலா, சோலை முதலிய உத்தீபன விபாவத்தால் எழுப்பப்பட்டுக் கண்ணீர் வார்தல், கடைக் கண்ணோக்குதல் முதலிய காரியங்களால் அனுபவப்பட்டு, விரைவு, நினைவு முதலிய சஞ்சாரி பாவங்களால் வளர்க்கப்பட்டு மனத்தில் நிலைபெறுகின்றது

இவ்வாறு தோன்றித் தெளிவாகி, வளர்ந்து வருகின்ற காதல் முதலாகிய பாவங்கட்கு நல்லறிஞர் உள்ளத்தில் உண்டாகும் பிரதிபிம்பமே ரஸம் எனப்படும் தூய வெண்ணிறத்தனவாகிய ஞாயிற்றின் கதிர்கள் செந்நிறக் கண்ணாடியில் படும்போது அவற்றிற்குச் செந்நிறம் உண்டாதல் போன்று, காரணம் முதலிய-