புலவர் த. கோவேந்தன்
101
ஜப்பானிய நாடக வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் சிகமாட்ஸு (1653) என்பவர். இவருடைய நாடகங்கள் இரு வகைப்படும். ஒருவகை வரலாற்று விஷயங்களை அடிநிலையாக உடையன. அவை ஜி-தை மானோ எனப்படும். மற்றொரு வகை சேவ மானோ, அவை வாழ்க்கையைச் சித்திரிப்பன.அவை பெரும்பாலும் ஐந்து அங்கங்கள் உடையன
சிகமாட்சு ஐம்பத்தொரு நாடகங்கள் எழுதியுள்ளார். ஒவ்வொன்றும் அநேகமாக ஷேக்ஸ்பியர் நாடகத்தின் நீளம் உடையது. இவரை ஜப்பானியர் ஷேக்ஸ்பியருக்கு இணையானவர் என்று போற்று கின்றனர். இவருடைய நாடகங்கள் பலவகையில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஒத்துள்ளன. இவருடைய நாடகங்களில் மிகவும் சிறப்புற்றது கோகுசேன்யா காசென் (1715) என்பதாகும். இவருடைய நாடக சந்தர்ப்ப அமைப்பும் உரையாடல் அமைப்பும் போற்றற்குரியன. என்ன குறையிருப்பினும் சலிப்பு உண்டாகும் என்ற குறை இருடைய நாடகங்களில் கிடையாது.இப்போதும் (1958) இவருடைய நாடகங்கள் நடிக்கப்பட்டு வருகின்றன.
இவருக்குப் பின் வந்த சிகமாட்சு ஹானி என்பவர் செய்யுளைக் குறைத்து, வசன உரையாடலுக்கே தலைமை தந்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ட்ஸஅபோச்சி என்பவர் எழுதிய மாகி நோ காட் என்பதும் கிகு தோ கிரி என்பதும் புகழ் பெற்றவை. இவைகளில் செய்யுள், பாட்டு கிடையா; முற்றிலும் உரையாடலே.
இக்காலத்து நாடக இயக்கம் ஷிங்கெக்கி எனப்படும். அதை மிகுந்த முன்னேற்றம் அடையுமாறு செய்தவர். ஆசனை சாவோரு என்பவராவார்.