தமிழ்
நாடகக்கலை
வரலாறு
தமிழ்மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடகத்தை மூன்று பிரிவாகக் கருதலாம். சங்க காலத்திலும் அதற்கு முன்னும் இருந்த நாடகம், இடைக் காலத்து நாடகம், இக்காலத்திய நாடகம் என்று வகுத்து இவைகளைப் பற்றி ஆராய்வோம்.
சங்க காலத்தில் தமிழ் நாடகம் சிறந்த நிலையில் இருந்தது என்பதைச் சிலப்பதிகாரம் என்னும் நூலைக் கொண்டும், அதன் உரைகளைக் கொண்டும், அறியலாம்.
அக்காலத்திய தமிழ் நாடக இலக்கிய நூல்களில் நாடக மேடை என்ன இடத்தில்தான் அமைக்கப்பட வேண்டும் என்றும், திரைகள், வெளிச்சம் முதலியன எப்படி அமைக்கப்பட வேண்டும் என்றும், மேடையில் அலங்காரம் எவ்வாறு செய்ய வேண்டும் என்றும், இன்னும் பற்பல விஷயங்களைப் பற்றியும் நாம் வியக்கும் படியாகவும் விரிவாகவும் கூறியுள்ளனர். அக்காலத்தில் நாடக மேடைத் திரைகள் ஒருமுக எழினி, கரந்துவரல் எழினி, பொருமுக எழினி என்று மூவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. எழினி என்பது திரை, ஆடவர்கள் பெண் வேடம் புனைவதானால் எவ்வாறு அலங்காரம் செய்து கொள்ள வேண்டுமென்று குறிக்கப்பட்டி ருக்கிறது. முகத்தில் வர்ணம் தீட்டும்போது புருவத்திற்கு