பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

செந்தமிழ் பெட்டகம்


னின்று அறிகிறோம். இது நாடகம் பார்க்க வந்திருக்கும் மக்களின் மனத்தை முதலில் மகிழ்விக்கச் செய்ய ஏற்பட்டது போலும். இதன் பின்பு நாடகம் தொடங்கும். பிறகு நடிகனோ நடிகையோ திரையைத் திறந்து கொண்டு அரங்கத்தில் வந்து பக்கத்தில் இருந்து கொண்டு, பாடகர்களும் துணிக் கருவியாளர்களும் பாட, அப்பாட்டுக்களுக் கிசைந்த படி அபிநயத்துடன் ஆடி இருக்க வேண்டுமென்று ஒருவாறு கூறலாம்.

இது ஒருவிதத்தில் தற்காலத்திய மலையாளத்து கதகளியை ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. அக்காலத்தில் நடிகர்கள் அணிந்த உடை முதலியனவும் கதகளியாடுவோர் இப்போது அணிவதை ஒத்திருந்தன போலும், இன்னின்ன வேடம் இப்படியிப்படிப் பூண வேண்டும் எனவும் இன்னின்ன இரச பாவங்களை இப்படியிப்படி அபிநயிக்க வேண்டுமெனவும் மிகவும் நுட்பமாகப் பழைய நாடக இலக்கய நூல்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன.

பழைய நூல்களில் பெண்டிர் ஆண் வேடம் பூண்டால் ஆடை முதலியவற்றை இவ்வாறு தரிக்க வேண்டுமென்றும், ஆடவர் பெண் வேடம் பூண்டால் இவ்வாறு தரிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். இதற்கு முறையே ஆண் சோடனை, பெண் சோடனை என்று பெயராம். பேடி வேடம் பூணுங்கால் இன்னின்ன வாறு ஆடை முதலியன அணிய வேண்டுமென்றும் குறித்திருக்கிறார்கள், நாடக மேடையில் ஆடவோர்க்கிடமும், பாடுவோர்க்கிடமும், ஆட்டி வைக்கும் ஆசிரியர்க்கிடமும் இசைக் கருவியாளர்களுக்கிடமும், தனித்தனியாக அமைக்கப் பட்டிருந்ததாக அறிகிறோம். இன்னின்ன சந்தர்ப்பங்களுக்கு இன்னின்ன முக பாவங்களும் அபிநயமும் இருக்க வேண்டுமென்று விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒரு நூலில், “நாடகத்தில் அபிநயிக்கும் போது முக பாவம் முக்கியம்; அதிலும் கண்களின் அபிநயம் மிகவும முக்கியம்; அதிலும் முக்கியமானது