பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

செந்தமிழ் பெட்டகம்


ஏனெனில் பிரிவில் காதல் தூயதாகி, இரு உள்ளங்களும் ஆத்ம சக்தியால் கட்டுண்டு விடும். சமஸ்கிருத நாடகத்தைப் பார்ப்பதன் மூலம் ஏற்படும் சுவையின்பம் உலக இன்பத்தினின்றும் தனிப்பட்ட பேரின்பத்தின் தோற்றமாய் அமைந்திருக்கிறது. நாடகத்தை வேதாந்திகள் உலக மாயைக்கு உவமையாகவும், நாடகம் நடத்தும் சூத்திரதாரனை உலகை ஆட்டிவைக்கும் கடவுளுக்கு உவமை யாகவும் கூறுவதிலிருந்து நாடகம் பண்பாட்டில் எவ்வளவு தூரம் ஊன்றியிருந்ததென்று தெரியும்.

சமஸ்கிருத நாடகங்களும் நாடிகைளும் :

காட்சிக்குரிய காப்பியவகையான ரூபகத்தின் பத்து வகைகளில் நாடகம் முதலாவது. பிரகரணம் இரண்டாவது. எல்லா ரூபகங்களும் நாடகத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

பிரகரணம், நாடகம் என்ற இருவித ரூபகங்களின் குனாமிசங்களைக் கொண்டது நாடிகை, இது பிரகரணத்தைப் போல் கதைப் போக்கையும், நாடகத்தைப் போல் அரசனை நாயகனாகவும், பிரதானமாகவும் கொண்டது. இதில் பல நடிகைகள் நடிப்பார்கள். இது நான்கு அங்கங்களைக் கொண்டது.

காளிதாசன் :

சமஸ்கிருத நாடக ஆசிரியர்களுள் தலை சிறந்தவர்; நான்காம் நூற்றாண்டிலிருந்தவர்

ஹர்ஷவர்த்தனர் :

இவர் கான்யகுப்ஜத்தில் 606 முதல் 648 வரை அரசு புரிந்தார். எல்லா நாடக இலக்கணங்களும் பொருந்தியதும், எல்லோராலும் மேற்கோளாகக் கூறப்படுவதும், நடிப்பதற்கு மிகவும் பொருத்தமானதும் ஆக உள்ள ரத்தினாவளி, நாகானந்தம், பிரியதரிசிகை என்ற முன்று