பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

127


பாலபாரதம் :

திரெளபதியின் திருமணம், சூதாட்டம், வஸ்திராப கரணம் ஆன கதைகளுள்ளன. பூர்த்தியாக இல்லை. கருப்பூரமஞ்சரி என்பது ஒரு நாடிகையாக இருந்த போதிலும் சமஸ்கிருதத்தில் இல்லாமல் பிராகிருதத்தில் எழுதப்பட்டிருப்பதால் சட்டகமென்று கூறப்படுகிறது. சண்டபாலனுக்கும் கருப்பூரமஞ்சரிக்கும் பைரவானத்தன் என்னும் மாந்திரிகன் உதவியால் திருமணம் நடக்கிறது. நான்கு அங்கங்கள் உள்ளன. வித்தசால பஞ்சிகை நாடிகை வகையைச் சார்ந்தததாகும். சண்ட வர்மனுக்கும் மிருகாங்கவல்லிக்கும் திருமணம் நடை பெறுகிறது 10-11 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியெழுந்த இராமாயண நாடகங்களுள் திந்நாகன் செய்த குந்தமாலா என்பதையும் குறிக்க வேண்டும்; இது உத்தர ராமாயண்க் கதையைக் கற்பனையுடனும், கருணாரசம் ததும்பும் படியும் எளிய நடையில் காண்பிக்கிறது.

சக்திபத்திரன் : இவர் சுமார் 900-ல் இருந்தவர். தென்னாட்டைச் சேர்ந்தவர். ஏழு அங்கங்களைக் கொண்ட ஆச்சரிய சூடாமணி என்னும் நாடகத்தில் இராமாயண கதையைச் சொல்லுகிறார்.

தாமோதரன், மதுசூதனர் 14 அங்கங்களைக் கொண்ட மகா நாடகம் அல்லது அனுமன் நாடகம் என்ற பெயருடன் இராமாயணக் கதையைச் சொல்லும் நாடகத்தை இயற்றியுள்ளனர். இதன் காலம் 10-11 ஆம் நூற்றாண்டுகளாகும் இதில் பல கவிகளுடைய பாக்கள் காணப்படுவதுடன் தொடர்பும் நன்கு பொருந்தவில்லை.

குலசேகரவர்மர் (11 ஆம் நூ.) கேரள அரசர். சுபத்திரா தனஞ்சயம், தபதிசம்வரணம் என்று இரண்டு நாடகங்களையியற்றியுள்ளார். f

பில்ஹணன் (11 ஆம் நூ) காச்மீர கவி. கர்ணா சுந்தரி என்ற நாடிகையை எழுதியுள்ளார்.