பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

161


மட்டும் கொண்டவர் செய்யுட்களை எழுதலாம்; கவிகளைப் பாடுவது இயலாது. படிப்புப் பயிற்சிகளின் குறைவால் ஏற்படும் இழுக்கைப் பிரதிபை மறைந்து விடும்; பிரதிபையில்லாததால் ஏற்படும் குறைகளைப் படிப்பதால் போக்க முடியாது. வியாசர், வால்மீகி, காளிதாசர் ஆகியோர் பிரதிபையை ஆதாரமாகக் கொண்டவர்கள். பிற்காலத்துச் சிலேடை சொல்லணிக் கவிகள் படிப்பை முக்கியமாகக் காட்ட முன் வந்தவர்கள்.

கவிதையின் சொல்லமைப்பு மற்ற வகைச் சொல்லமைப்பிலிருந்து எவ்வகையில் மாறுபட்டது என்பதை விளக்கியவர் பட்டநாயகர் என்ற சிறந்த காச்மீர நாட்டு அணியாசிரியர். சொற்றொடர்களான வேதம், சட்டம் என்றவற்றுள், ஒரு சொல்லை எடுத்து விட்டு மற்றொன்றைப் போடுவதென்பது முடியாது. ஆகையால் வேதமும் சட்டமும் சப்த பிரதானம், அதாவது சொல்லை முக்கியமாகக் கொண்டவை. நடந்த நிகழ்ச்சியை எப்படியாவது தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டவை புராணம், வரலாறு, கதை, செய்திப் பத்திரிக்கை, நடைமுதல் பேச்ச ஆகியவை, அதாவது இவை பொருளையே பொருட்டாகக் கொண்டவை. ஆனால் கவிதையில் சொல்லோ, பொருளோ முக்கியமல்ல; அவ்விரண்டையும் கொடுக்கும் முறையே இதில் முக்கியம்; இதை வியாபாரப் பிராதானியம், அதாவது கவிக்கென்று ஏற்பட்ட தனி வழியே முக்கியம் என்பர். இவ்வுண்மையை மஹிம பட்டர் என்ற அணியாசிரியர் சற்று மாற்றிச் “சொல் மட்டும் முக்கியமல்ல, பொருள் மட்டும் முக்கியமல்ல, இரண்டுமே முக்கியம், எப்படி என்றால், இரண்டையுமே மாற்ற முடியாதபடி அமைப்பது என்பது கவி சொன்ன முறை ஒன்றே அதற்கேற்ற தனிமுறை என்பதாகும், எனவே பட்டநாயகர் விளக்கியதையே இருவரும் வற்புறுத்தியதாகிறது.

செ. பெ.-ll-11