பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

15

 என்பது கம்ப ராமாயணத்தால் நன்கு விளங்குகின்றது. அவ் வள்ளல் வாய்மை நெறி வழுவாத சீலர் என்றும், சான்றாரை ஆதரிக்கும் அருளாளர் என்றும், தஞ்சம் அடைந்தோரைத் தாங்கும் தகைமையாளர் என்றும் நெஞ்சாரப் போற்றுகின்றார் கம்பர். அவர் தம் முன்னோர் பெருமையையும் குன்றிலிட்ட விளக்குப் போல் முடிசூட்டுப் படலத்திலே அமைத்துள்ளார். முடிசூட்டு விழாவில் வெண்ணெயூர்ச் சடையான் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி விசிட்ட மாமுனிவன் மணி மகுடத்தை இராமன் சென்னியிலே சூட்டினான் என்று பாடினார் கவிஞர்.

தமிழ் மொழியின் மீதும் தமிழ் நாட்டின் மீதும் சிறந்த பற்றுடையவர் கம்பர். தொன்று தொட்டு இந்நாட்டில் வழங்கும் தமிழ் மொழியை, 'என்றுமுள தென் தமிழ்' என்று போற்றுகின்றார். தென்மொழியைக் கற்றுப் பெருமை பெற்ற திருமுனிவனாகிய அகத்தியன் என்றும், பொதிய மலையில் அமர்ந்து அம்மொழியைக் கற்றுப் பெருமை பெற்ற திருமுனிவனாகிய அகத்தியன் என்றும், பொதிய மலையில் அமர்ந்து அம்மொழியைப் பேணி வளர்க்கின்றான் என்றும் பெருமிதமாகப் பேசுகிறார். கதாநாயகனாகிய இராமனைத் 'தென்சொற் கடந்தான் வடசொற் கடற்கு எல்லை தேர்ந்தான்' என்று போற்றுகின்றார்.

‘ஏழுமலை என்றும் திருப்பதி என்றும் பெயர்பெற்ற திருவேங்கடமலையே வடுகு என்ற தெலுங்கு நாட்டுக்கும் தமிழ் நாட்டிடுக்கும் வரம்பாகும் என்று கம்பர் தெளிவாகக் கூறுகின்றார். வடநாட்டுக் கங்கையும் தெலுங்கு நாட்டுக் கோதாவரியும் தமிழ் நாட்டுக் காவிரியைப் போன்ற நதிகள் என்று பாராட்டுகின்றார்; தமிழ் இலக்கிய மரபினைத் தழுவிய அந்நதிகளை வருணிக்கின்றார்.

கோசல நாட்டில் உள்ள சரயுநதி மலையிலே பிறந்து கடலை நோக்கிச் செல்லும் வழியில் ‘முல்லையைக்