பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

169


பற்றியும் சமயத்தைப் பற்றியம் கற்பனையால் புனைந் துரைத்தவைகளாகும். இந்திய, எகிப்திய, கிரேக்க, ரோமானியப் பழங்கதைகள் உலகமெங்கும் பெயர் பெற்றவை. வெவ்வேறு நாட்டுக் கதைகள் ஒத்திருப்பதிலிருந்து பல்வேறு மக்கள் இனங்களும் பொதுவான வழிமுறையிலிருந்து கிளைத்தெழுந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. மரபும் நாடோடி இலக்கியமும் பழங்கதைகளும் ஒன்றையொன்று ஒத்துள்ளன. பழங்கதைகளில் அறிவுக்குப் பொருந்தாயவை, பொருந்தாதவை ஆகிய இரண்டும் அடங்கியுள்ளன.

ஆதி மனிதன் தன் மனத் துண்டுதலின் பேரில் நடந்து கொண்ட விதத்திற்கும், செய்த செயல்களுக்கும் தக்க காரணங்கள் நாடினான். அவைகளை விளக்குவதற்குக் கதைகளைப் புனைந்தான். அன்றைய வாழ்க்கையைச் சமூகம் எவ்வாறு ஒழுங்குபடுத்தியது, கட்டுப்படுத்தியது என்பதை ஆதிக் குடிகளின் பழங்கதைகள் காட்டுகின்றன.

சம்பிரதாயத்திற்கு உயர்வும் மேன்மையும் கற்பித்து, அதை உறுதிப்படுத்துவது பழங்கதைகளின் நோக்கமாகும். இவை. மனிதனுடைய ஆழ்ந்த ஆசை, அச்சம், நம்பிக்கை, பற்று, உணர்ச்சி போன்றவைகளை உணர்த்துகின்றன; சமூக முறையும் திட்டமும் சரியென வலியுறுத்துகின்றன.

ஆதிமக்கள் ஆவி உலகில் நம்பிக்கை உடையவர்; ஆகவே அவ்வுலகுடன் சரியான உறவு வைத்துக் கொள்ள முயன்றனர்; பஞ்ச பூதங்களையும் முன்னோர்களின் ஆவிகளையும் தொழுதனர்; சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று, கடல், காடு, ஆறு, விலங்கு, தாவரம் முதலிய இயற்கைப் பொருள்கள் எல்லாம் ஆவிகளின் உறைவிடங்கள் எனக் கருதினர். இறந்வர்களின் ஆவிகள் தமக்கு வேண்டியவர்களைக் கவனித்துக் காப்பாற்றி வரும் என்று நம்பினர். ஆதி மனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள உயிருள்ள இயற்கைக்கும் உயிரற்ற