பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைக்


களஞ்சியங்கள்



கலைக்களஞ்சியக்காரர்கள் பிரெஞ்சு, பிரான்ஸில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுத்தாளர்களில் சிறந்த ஒரு தொகுதியினர் கலைக்களஞ்சியக்காரர்கள் எனப்படுவர். அவர்கள் வெளியிட்டு வந்த நூல் தொகுதிக்குக் கலைக்களஞ்சியம் என்று பெயர். இந் நூலில், சமூகக் கட்டுப்பாடுகளையும் கொள்கைகளையும் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தன. அன்று பிரான்ஸிலிருந்த ஊழல்களை நன்கு சுட்டிக் காட்டி இவ்வெழுத்தாளர்கள் சீர்திருத்தங்களை வற்புறுத்தினார்கள். இந்நூல் 29 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. முதல் தொகுதி 1751-ல் வெளிவந்தது. இப்பெரிய நூற்களஞ்சியத்துக்குப் பேராசிரியராயிருந்தவர் டீடரோ என்ற பேரறிஞர். ரூசோ, டர்கே, பப்பன், கியூனி போன்ற பேரறிஞர்கள் இந்நூலிற்குக் கட்டுரைகள் வழங்கினர்.

கலைக்களஞ்சியம் : இதை ஆங்கிலத்தில் ‘என்சைக் கிளோப்பீடியா' என்பர். மக்கள் கற்று அறிய வேண்டிய முக்கியமான பொருள்களனைத்தும் அடங்கியது என்பது இதன் பொருள்.

கலைக்களஞ்சியம் என்று தமிழில் கூறும்போது, கலை என்னும் சொல் அழகுக் கலைகளைக் குறிப்பதுடன், பல்கலைக்கழகம், கலைக்கல்லூரி, என்னும் சொற்றொடர்களில் குறிப்பது போல, எல்லா அறிவுப் பொருள்களையும் குறிப்பதாகும். கலைகள் அறுபத்து நான்கு