உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

195


இப்பொழுது உலகத்திலுள்ள கலைக்களஞ்சியங்களில் அதிகப் புகழ் பெற்றது ஆங்கில மொழியில் என்சைக்கிளோப்பீடியா பிரிட்டானிக்கா என்னும் பெயரால் வழங்குவதேயாகும். இது 1768-ல் தொடங்கப் பெற்றது; இதை வெளியிட்டவர்கள் ஏ. பெல் என்பவரும், சீ. மாக்பார்க்குவார் என்பவருமாவர். இது முதலில் 100 சிறு பகுதிகளாக வெளியிடப்பட்டுப், பின்னர் மூன்று தொகுதிகளாகக் கட்டப்பட்டது: 2,670 பக்கங்கள் கொண்டது. அதன் பிறகு திருத்தியமைக்கப்பட்ட பல பதிப்புகள் வெளியாகி, 1929-ல் பதினான்காவது பதிப்பு வெளியாயிற்று. இப்பதிப்பு 25 தொகுதிகளாக வெளியாகியிருக்கிறது; ஒவ்வொரு தொகுதியும் ஆயிரம் பக்கங்கள் கொண்டது. இதில் சுமார் ஐம்பதாயிரம் பொருள்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. பதினையாயிரம், படங்கள் காணப்படுகின்றன. இதைத் தயாரிக்க 25 இலட்சம் டாலர் செலவு செய்திருக்கிறார்கள். மூவாயிரம் அறிஞர்கள் கட்டுரை எழுதி யிருக்கிறார்கள். நோபெல் பரிசு பெற்றவர் இருபத்தைந்து பேருடைய ஒத்துழைப்பையும் பெற்றிருக்கிறார்கள். இன்னும் பதினைந்தாவது பதிப்புத் தயாராகவில்லை. ஆயினும் 1933 முதல், ஆண்டு தோறும் செய்ய வேண்டிய மாற்றங்களையும் அபிவிருத்தி களையும் சேர்த்து ஆண்டு நூல்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இங்கிலாந்தில் வெளியாகியுள்ள எவ்வரிமான்ஸ் கலைக்களஞ்சியமும் சேம்பர்ஸ் கலைக் களஞ்சியமும் சிறந்தனவாகும். வேறு பல சிறிய களஞ்சியங்களும் வெளியாகியுள்ளன. 1796-1808ல் வெளியிடப்பட்ட, சேம்பர்ஸ் கலைக்களஞ்சியமானது, இன்றுவரை மிகச் சிறந்ததாகக் கருதப்படும் பிராக்காஸ் என்பவர் ஜெர்மன் மொழியில் தயாரித்த கான்வர்சேஷன் லெக்சிக்கன் என்னும் நூலைத் தழுவியதாகும். -

இதுமாதிரியே அமெரிக்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் பல கலைக்களஞ்சியங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களுக்கென்று வேறு தனியாகவும்