பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

197


ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி இரண்டு விதமான கொள்கைகள் காணப்படுமானால், இரு கொள்கையினரையும் வேறு வேறு கட்டுரைகள் எழுதும்படி கூறலாம். அல்லது ஒரே கட்டுரையில் இரண்டு கொள்கைகளையும் மதிப்புரை கூறாமல் எடுத்து ரைக்கலாம்.

எந்தப் பொருள்களுக்கு வேறு நல்ல நூல்கள் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றனவோ, அந்தப் பொருள்களைக் குறித்துச் சுருக்கமாக எழுதி, விரிவாக எழுதியுள்ள நூல்களின் பெயரைத் தந்தால், மற்றப் பொருள்களை விரிவாக எழுத இடம் செய்து கொள்ள முடியும். கலைக்களஞ்சியித்தில் ஆட்சேபத்துக்கு இடமான விவரங்களையும், தருமோபதேசம் கூறுவதையும் விலக்க வேண்டும். முன்னோர் வரலாற்றை எழுதும் போது வெகு முக்கியமானவர்களுடைய வரலாற்றை மட்டும் தரவேண்டும். தற்காலத்தவர் வரலாற்றை எழுதுவதானால் தகுதியறிந்தே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் கேள்விகளுக்கும் முழு விவரங்களுடன் விடை கூற முயல்வது களஞ்சியத்தின் உண்மையான பண்பன்று. மேன்மேலும் படிக்கவும் ஆராயவும் துாண்டுவதே அதன் வேலை.

இவ்வாறு பலவிதமாக ஆராய்ந்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டாரும் தத்தம் மொழியில் கலைக்களஞ்சியத்திலும் தயார் செய்து வருகிறார்கள். கீழ்த்திசையிலுள்ள ஜப்பானியரும் தமது மொழியில் பத்துத் தொகுதிகள் கொண்ட கலைக் களஞ்சியம் ஒன்று இயற்றியிருக்கிறார்கள்.

இக்காலத்தில் பொருள்களை அகர வரிசைப்படுத்தி இயற்றும் களஞ்சியங்களைப் போலொத்த நுால்கள் பாரத நாட்டில் பண்டைக்காலத்தில் தோன்றியதில்லையாயினும், சகல பொருள்களைப் பற்றியும் சுருக்கமாக விளக்கங்கள் ஒரே நூலில் தரவேண்டும் என்ற எண்ணம்