பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

213



நடத்தி வந்தார். ஆனால், இத்தகைய பத்திரிகைகளை அடக்க வேண்டுமென்றே அரசாங்கம் ஒரு புதிய அச்சுச் சட்டத்தை 1908 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிறப்பித்தது.

‘இந்தியா’ பத்திரிகை வேறொருவர் பெயரால் நடைபெற்று வந்ததால், அவரை அந்தச் சட்டப்படி தண்டித்தது. பாரதியாரின் நண்பர்கள். இவர் பேரிலும் ‘வாரண்டு' இருப்பதாகக் கேள்வியுற்று இவர் உடல் நிலை கருதி இவர் சிறைப்படாமலிருப்பதே நல்ல தென்று தீர்மானித்துப் புதுச்சேரிக்குச் செல்லுமாறு வேண்டினர். பாரதியாரும் ஆங்கில அரசாங்கத்தின் சட்டத்திற்குச் சிக்கிக் கொள்ளாமல் தமது தேசப்பணியைத் தொடர்ந்து செய்யலாமென்றும், 'இந்தியா’ பத்திரிகையை அங்கிருந்தே வெளியிடக்கூடும் என்றும் கருதிப் புதுவை செல்ல ஒருப்பட்டார். அரவிந்த கோஷூம், வ.வே.சு. ஐயரும் அங்கு வந்து சேர்ந்ததால் அவர்களுடன் சேர்ந்து பாரதியார் அரசியல் துறையிலும் கலைத்துறையிலும் புதிய புரட்சிகரமான முறைகளில் வேலை செய்வது சாத்தியமாயிற்று.

புதுவை செல்வதற்கு முன்பே, ஞான ரதம் என்ற வசன காவியத்தை எழுதி முடித்தார் பாரதியார்.தேசியப் பாடல்களின் முதலாவது புத்தகமும் வெளிவந்திருந்தது. ஆனால் பாரதியாரின் கவித்திறன் கனிவெய்திப் “பாஞ்சாலி சபதம்' முதலான நூல்களாக வெளிப்பட்டது புதுவையிலேதான். 'செந்தமிழ்த் தென்புதுவை’ என்று இவர் வாயால் பாடப் பெற்றிருக்கும் புதுவையில் அரண் இல்லாச் சிறையில் விலங்கில்லாக் கைதியாக 1908 அக்டோபர் முதல் 1918ஆம் ஆண்டுவரை இவர் விசித்து, மறுமலர்ச்சித் தமிழருக்குப் பெருந்தொண்டுகள் புரிந்தார்.

இவர், ‘பாரதி அறுபத்தாறு’ என்ற தம்முடைய பாடல்களில் குவளைக் கண்ணன் என்று குறிப்பிடும் குவளைக் கிருஷ்ணமாசாரியரைப் புதுவையில் சந்தித்