பந்நூல் அறிஞர்
வ.உ.சி.
இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப் பிடாரம் என்ற சிற்றுாரில் 1872 செப்டம்பர் 5ஆந் தேதி பிறந்தார். தந்தையார் வ. உலகநாதபிள்ளை. எட்டையபுரம் சமஸ்தான வழக்கறிஞர். தாயார் பரமாயி அம்மாள்.
பிறந்த ஊரிலும் பின்பு திருநெல்வேலி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பள்ளியிலும், இறுதியில் தூத்துக் குடியில் சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்று, ‘மெட்ரிக்குலேஷன்' தேறினார். சின்னாள் ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் குமாஸ்தா வாகப் பணிபுரிந்தார். பிறகு திருச்சிராப்பள்ளி சென்று, சட்டக் கல்லூரியில் கற்று, 23ஆம் வயதில் வழக்கறிஞர் தேர்வில் சிறப்புறத் தேறினார்.
சொந்த ஊரில் வழக்கறிஞராக இருந்தார். ஏழைகளுக்காகப் பொருளின்றி வாதிடுவார். ஒரு வழக்கில் இவர் ஒரு கட்சியிலும் இவருடைய தந்தை மறு கட்சியிலும் வழக்காடினர் இவர் வெற்றி கண்டார். தந்தை மகிழ்ந்தார். 1900ஆம் ஆண்டிலிருந்து தூத்துக்குடியில் தங்கி வழக்கறிஞர் தொழில் நடத்தினார்.
1905-ல் வங்காளம் பிரிவினை செய்யப்பட்டதற்காக நாடு முழுவதும் விடுதலை வேட்கையும் போராட்டமும் கிளர்ந்தெழுந்தன. வங்காளத்தில் விபினசந்திரபாலரும் பாஞ்சாலத்தில் லஜபதிராயும், மகாராஷ்டிரத்தில்