பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

செந்தமிழ் பெட்டகம்


பஞ்ச மகா காவியங்கள் :

மகா காவியங்களுள் மிகப் பிரசித்தி பெற்றவை இரகுவமிசம், குமாரசம்பவம், கிராதார்ஜூனியம், சிசுபாலவதம், நைஷதீய சரிதம் இவ் வைந்துமாகும் இவற்றுக்குப் பஞ்சமகா காவியங்கள் எனப் பெயர் வழங்கும்.

இரகு வமிசம் :

இது மகாகவியான காளிதாசரால் இயற்றப் பெற்றது. புராணங்களில் பிரசித்தி பெற்ற சூரிய வமிச அரசர்களான திலீபன், இரகு, அஜன், தசரதன், இராமன் இவர்களுடைய கதையும், அக்கினி, வருணன் ஈறாக இராமன் வமிசத்தோர் கதையும் இதிற் கூறப்பெற்றிருக்கின்றன. முதற் சருக்கத்தில் திலீபன் வெகுகாலம் பிள்ளைப் பேறின்றிப் பரிதவித்துக் குருவான வசிஷ்டரின் ஆசிரமத்துக்குச் செல்லுகிறான். காமதேனுவின் சாபத்தால் அவனுக்குக் குழந்தை பிறக்கவில்லை யென்றும், தம்மிடமுள்ள காமதேனுவின் பெண்ணான நந்தினியைப் பூசித்தால் மகப்பேறு கிடைக்குமென்றும் வசிட்டர் உபதேசிக்கின்றார்.

இரண்டாம் சருக்கத்தில் நந்தினி திலீபனுடைய பக்தியைச் சோதித்துப் பிள்ளைப் பேற்றை அனுக்கிரக்கின்றாள். மூன்றில் திலீபனுக்கு இரகு பிறந்து, திலீபன் விடுத்த அசுவமேதக் குதிரையைக் காக்க இந்திரனுடன் போர் புரிந்து, அவன் அனுக்கிரகத்தைப் பெறுகின்றான். நான்காம் சருக்கத்தில் இரகு அரசனாகி விசுவஜித்து என்னும் யாகம் செய்கிறான். ஐந்தில் இரகுவின் வள்ளல் தன்மையும், அவனுக்கு அஜன் என்ற மகன் பிறந்ததும், அஜன் இந்துமதியின் சுயம்வரத்திற்குச் சென்ற கதையும் கூறப் பெறுகின்றன. ஆறில் சுயம்வரமும் இந்துமதி அஜனுக்கு மாலையிட்டதும் வருணிக்கப் பெறுகின்றன. ஏழில் அஜன் இந்துமதியை மணந்து மற்ற அரசர்