புலவர் த. கோவேந்தன்
73
தற்செயலாக விபத்துக்கள் ஏற்படலாம். இவையும் வீழ்ச்சிக்குக் காரணமாகலாம்.
ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களின் தத்துவத்தைத் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம் : மனிதன் ஏதேனும் ஒன்றைச் செய்து விட்டால் அதன் பிறகு ஏற்படும் விளைவுகளை அளவிடவோ கட்டுப்படுத்தவோ அவன் அதிகாரி ஆகான்.
இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியருக்குப் பிறகு நெடுங் காலம் துன்பியல் நாடக வரலாற்றிலே குறிப்பிடத் தகுந்த எவரும் தோன்றவில்லை. கோட்டோ என்னும் நாடகத்தை வரைந்த அடிசனை விட்டால் ஆங்கில இலக்கி யத்தில் குறிப்பிடக்கூடியவர்கள் யாவரும் 18 ஆம் நூற்றாண்டு வரையில் தோன்றவில்லை.
18ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சி மிகுந்தது. எந்த வகையான உணர்ச்சிக்கும் விஞ்ஞான விளக்கத்தைக் கண்டு கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. துன்பியல் நாடகத்தில் ஏற்பட்ட இரக்கமோ அச்சமோ இப்போது எற்பட முடியாமல் போய்விட்டது. மேலும், இலக்கியம் என்பது வாழ்வைச் சித்திரிப்பது என்ற கருத்து வளர்ந்தது. அரசர்களும் பிரபுக்களும் அடைகின்ற வீழ்ச்சிதான் துன்பியல் என்ற விளக்கத்துக்குச் செல்வாக்கு மறைந்துவிட்டது. சமுதாயத்தின் கொடுமைக்குத் தனிமனிதன் இரையாவதில் துன்பியல் நாடகங்கள் உயிர்ப்புற நேர்ந்தது.
கிரேக்கத் துன்பியல் நாடகங்களில் தேவர்களோடும் தேவதைகளோடும் விதியோடும் போராடிய மனிதன் இன்று சமூகத்தோடு போராடுகிறான். நாடகத்திலும் தன்னைப் போன்ற மனிதர்களையே காண நினைக்கின்றான். முடி சூட்டலும் முடி இழத்தலும் போன்ற பெரு நிகழ்ச்சிகளில் மனம் பதியவிடாமல், உள்ளத்தின் போராட்டத்துக்கே இன்றைய மனிதன் மிகுந்த மதிப்பு அளிக்கிறான். உள்ளத்தின் போக்கும் அதனுடைய