பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

seg. வேதியர்க்குங் கற்றேர்க்கும் மிக்கோர்க்கும் பக்கீர்க்கும் சாதி யெவர்க்கும் அன்ன சத்ரம் வளர்ப்பவன்காண் 89. புவிநாலு திக்கும் புகழெலாங் கொண்டாடும் கவிநா வலவர்கலிக் கங்குலுக்கோர் சூரியன்காண் 90. பாரனைத்தும் போற்றும் பரராசர் கொண்டடும் வீரவிக்ர மாறனென வெற்றிகொண்ட வெம்புலிகாண் 91. கோரப் பறங்கி குலங்களெல்லாம் வேரறுத்துச் சூரத் தனமிருத்த சுத்தரண கேசரிகாண் 92. இரணிய கெர்ப்ப இரவிகுல ராசன் தரணிய புகழுந் தனுக்கோடி காத்தமுகில் 93. மூவுலகை யாளும் முடிமன்னர் போற்றவந்த தேவைரகு நர்தேந்த்ரன் சிந்தை களிகூர 94. அட்டகச மன்னமத யானைத் திரள்கோடி வட்ட மிடுங்கவன வாசித் திரள்கோடி 95. ஆரங்கி யாக அண்ட கூடந் தகர்த்திடிக்கும் பீரங்கி கோடி பிடிகோடிதேர்கோடி 96. பச்சைக் கடகம் பரியகலிக் கத்துறாய் வச்சிரப் பந்தி வயிடுரி யக்கடுக்கண் 97. சீனச் சுருட்டுச் சிவந்தசக லாத்துவெகு மானச் சுளிகையங்கி வச்ராங்கி பொற்சோடு | 98. உச்சிதமாய்க் கட்டி யுரகத் துடன்கொடுக்க மெச் சியிவன் நிக்காஹ் வேந்தனென வேமகிழ்ந்து 99. தண்டிகைமுன் பின்வெள்ளைச் சாமரைகா ளாஞ்சிகுஞ்சம் அண்ட முகடுடைய ஆனை மேற் பேரிகையும் 100. சொல்லரிய சாமித் துரோகிகண்ட தண்டயமும் வல்லமையாய் நல்க வரிசைபெற்ற மன்னவன்காண் ♔ - வள்ளல் சீதக்காதி ר பறங்கி: ஐரோப்பியரைக் குறிக்கும் பொதுச்சொல் இங்கு போர்ச்சுக்கீலியரை குறிக்கிறது.