பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து 125. இந்தமல ரெல்லாம் இசைந்தர மாய்த்தொடுத்துப் பந்தரிட மெல்லாம் பரிந்துவிதா னித்தனரே 126. பூங்கமுகின் பாளைதென்னம் பூவிரியுங் காவிரியும் தேங்கதலித் தாறுநிரை செவ்விளநீர்ப் பைங்குலையும். 127. மிச்சமென்று கூறுமெலு மிச்சம் பழத்துடனே இச்சகங்கொண்டாடுங்கொ ளுஞ்சிப் பழம்பலாக்காய் 128. வாழைப்பழமும் வளர்தமரத் தம்பழமும் கூழைப் பலாவின் குடக்கனியுந் தூக்கினரே 129. பொற்குடம்போல் வாய்குவிந்த்த பூமாது ளங்கனியும் பற்பலசிங் காரமதாய்ப் பந்தரெங்குந் தூக்கினரே 130. கரும்புடனே பைங்கதலி காய்க்கமுகு கொண்டாடும் கரும்புலவச் செம் பவளத் தூண்கடொறுஞ் சேர்த்தினரே 131. மேகவண்ணப் பட்டுடனே வீரவா ளிச்சேலை வாருபெற ருத்ரவன்னி வாழ்சந்த்ர வன்னியுடன் 132. மாந்தளிர்போற் பூத்தொழிலின் வன்னமிகு சூர்யபடம் காந்திபெறும் பொற்சரிகைக் கம்பிக் கரைச்சேலை 133. வண்ணவண்ண மாக வகைவகையே கொய்துகொய்து மின்னுெ எளிசேர் காவணத்தை மிக்கா யலங்கரித்தார் 134. வந்தநவ ரத்ன மணவறையில் வெண்கிரணச் சந்த்ரகலைச் சிங்கா சனமு மமைத்தனரே 135. தேகங் குளிர்ச் சிறுகொண்டல் வீசிவரப் பாகங்க டோறும் பலசா ளரம் வகுத்தார் 136. பக்கமெல்லாங் கோடி பகலோ னுதித்ததென மிக்கநவ ரத்ன விளக்கெல்லாம் நின்றொளிரத் 137. தூண்டா மணிவிளக்குத் தூக்குவிளக் குஞ்சிறப்பக் கூண்டா யிரங்கோடிக் குத்துவிளக் கேற்றினரே