பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து <@> yr 150. சம்பங்கிப் பூந்தயிலம் தான்முடியிற் கோதியம்பொற் கும்ப நிறையுங் குளிர்மஞ்ச னஞ்சொரிந்தார் 151. பூந்துகிலா லீரம் புலரப் புலர்த்தியபின் வாய்ந்தபசும் பொன்னுடை வர்க்கந் தெரிந்தெடுத்து 152. வன்ன சுளிகை வரிசை நிசாரணிந்து" பொன்னினரை ஞானும்வச்ரப் பூட்டுமுருக் காணியிட்டு 153. பொன்னம்பர் கஸ்தூரி பூம்பன்னீர் சந்தனமும் தென்னம் புனுகுசவா தெல்லாம் புயத்தணித்து 154. தோற்றுமணி வச்ராங்கிச் சோடணிந்து" மேதினியோர் போற்றி விலைமதியாப் பொன்னினடுக் கட்டிறுக்கிப் 155. பச்சை மணியுதர பந்தனமுஞ் சேர்ந்திலங்கும் வச்சிரத்தி னு லிழைத்த வாகுவல யம்புனைந்து 156.வாகுபந்த னம்பூட்டி வயிரத்துறா அணிந்து நாகரிகக் கைமேலே ரத்னகங்க ணம்புனைந்து 157. சீவரத்தைக் தாலிழைத்த செய்யவீர வாளியிட்டுக் காவையொத்த கைமேல் கரபந்த னந்தரித்துத் 158. தண்டரள மாலிகையுந் தங்கச் சரப்பளியும் கண்டசர மும்பொற் கணபதக்க முந்தரித்து 159. மாணிக்க மாலையுடன் குங்குமத்தார் மார்பிலணிந் தானிக்கு வேளெனக்கண்ணுடி நிழல்பார்த்து 160. வீசுசரு வந்து முடி மீதுநவ ரத்தினத்தின் வாசிங்கம் பூட்டி வயிரத் துறா நிறுத்திப் 161. பொன்ரை மாலையிட்டுப் பூச்செண்டு கைப்பிடித்து மின்னர் குரவையிட வெள்ளான யேறினனே -N நிசார்: (உருதுச்சொல்) கால்சட்டை " சோடு : (உருதுச்சொல்) காலணி فا