பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86- செந்தமிழ் வள்ளல் சீதக்காதி

(கப்பல் ஒன்றை அரபிக் கடலிலும், வங்கக் கடலில் சங்குகளை) ஏற்றிச் சென்ற மற்றொரு கப்பலையும் வங்கக் கடலில் வழிமறித்து நிறுத்தி இருந்ததை டச்சுக்காரர்கள் அனுமதி அளித்து அவைகளின் பயணம்தொடருமாறு செய்தனர்.

பெரிய தமiபிமரைக்காயர் மன்னார் வளைகுடாவின் இலங்கை ப் பகுதியில் சங்குகள் எடுப்பதற்காக டச்சுக்காரர்களிடம் முறையாக அவருக்கு உரிமம் வழங்க வேண்டுமெனக் கோரியிருந்தார். சந்தேகக் கண்களுடன் இந்தக் கோரிக்கையை அணுகிய டச்சுக்காரர்கள் அவருக்கு உரிமம் வழங்க மறுத்துவிட்டனர். இதனைப்பற்றி பட்டேவியாவிலுள்ள தமது கவர்னர் ஜெனரலுக்கு யாழ்ப்பான பிரதிநிதி அனுப்பிய அறிக்கையில் பெரியதம்பி மரைக்காயர் முத்துக் குளிப்பதைக் குறியாகக் கொண்டு சங்கு எடுக்க மறைமுகமாக உரிமம் கோரினார் என குறிப்பிட்டிருந்தார். மேலும் இது போலவே மற்றொரு நிகழ்ச்சி டச்சுக்காரருக்கு பெரியதம்பி மலுைக்காயர் மீதான சந்தேகக் குறையவில்லை என்பதை காட்டுகிறது. இலங்கை கல்பிட்டியாவில் மிகுதியாக விளையும் கொட்டைப் பாக்குகள் அனைத்தையும் கொள்முதல் செய்து கொள்வதாகக் கோரிய சீதக்காதி மரைக்காயரது விண்ணப்பத்தையும் டச்சுக்காரர்கள் புறக்கணித்து விட்டனர். கி.பி.1694-ல் பெரியதம்பி மரைக்காயர் கீழக்கரையில் வானியப் பிரிவு ஒன்றினை தொடங்கி தங்களது வியாபாரத்தை தொடருமாறு டச்சுக்காரர்களை வேண்டிக்கொண்டார். வாணிபம் சிறப்பாக நடைபெறுவதற்கு வாணிபத்தில் போட்டி அவசியம் என்பதை உணர்ந்திருந்ததால் மரைக்காயர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

வழக்கச்போல டச்சுக்காரர்கள் இந்தக் கோரிக்கையை மறுத்ததுடன் பட்டேவியாவிலுள்ள தங்களது தலைமைக்கு அனுப்பிய அறிக்கையில், பெரியதம்பி மரைக்காயரை எந்த வகையிலும் நமீபமுடியாது என்றும் அதனால் கம்பெனியின் வியாபாரத்திற்கும். மதிப்பிற்கும் பெரும இழப்பீடுதான் ஏற்படும் ام حا