பக்கம்:செம்மாதுளை .pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

கன்னத்தில் வடு, கழுத்தில் கரும்புள்ளி-இந்த இரண்டு அடையாளங்களும் தேவனைக் குழப்ப ஆரம்பித்தன. நடப்பதும், நிற்பதும் கைகளைப் பிசைவதுமாக இருந்தான் முடிவு காண முடியாத அவனது குழப்பம் ஓலை கொண்டு வந்தவனின் பெயரைக் கேட்டுக்கொள்ளாத காவலர்களின் பேரிலேயே அதிகக் கோபத்தை ஊட்டிக் கொண்டிருந்தது.

"கவுதாரி!" என்று உச்சி மாடத்திலிருந்தபடியே கூவினன்.

"வந்துட்டேனுங்க!" என்று துடித்துக்கொண்டே உள்ளே ஓடிநான் கவுதாரி!

"ஓலை கொண்டு வந்தவன் வாலிபன், நடுத்தர ஆசாமியா?"

"சின்ன மீசை கூட வச்சிருந்தாருங்க!"

தேவனுக்குக் குழப்பம் வளர்ந்தது: அருமைத் தங்கை கல்யாணியின் அழகுருவம் அவன் மனத்திரையில் வந்து நின்றது. தேவன் ஒரு கணம் மெய் மறந்து நின்றான்: மூன்றாவது முறையாக ஓலைச் சுருளை விரித்துப் படித்தான்.

அன்புள்ள பெரியண்ணுவுக்கு,

நீண்ட யோசனைக்குப் பிறகு இந்த ஓலையை எழுதத் துணிந்தேன் பட்டமங்கலத்து வைரமுத்தருக்கு வாழ்க்கைப் பட வேண்டுமென்ற எனது ஆசையை நிறைவேற்றி வைத்தீர்கள். தங்கையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் தமையனைப் பெற்றிருக்கிறது கள்ளர் தேசம் என்று நாட்டவர் பெருமைப்பட்டார்கள். ஆனால் என் தலையில் நானே மண்ணை வாரி இறைத்துக் கொண்டேன் என்பது இப்போதுதான் புரிகிறது. கொட்டும் தேள்களும் கொடிய நாகங்களும் இழையும் மரணக் கிணற்றில் என்னையுமறியாமல் தடுமாறி விழுந்து விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/14&oldid=495091" இலிருந்து மீள்விக்கப்பட்டது