பக்கம்:செம்மாதுளை .pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஏழைப் பெண்களின் இதயங்களைக் காட்டிலும் எட்டுச் சுவர்களுக்கப்பால் அடைத்து வைக்கப்படடிருக்கும் செல் வக் குடும்பத்துப் பெண்ணின் இதயம் மெல்லியதாகத்தான் இருக்கிறது. நல்லது கெட்டதுகளை ஆராயும் திறன் பணக்கார உள்ளத்திற்கு அறவே இல்லை அண்ணு. போன வருஷம் கீழ்க்கோட்டைத் திருவிழாவுக்குப் போயிருந்த போதுதான் வைரமுத்தரை நான் முதன் முதலாகப் பார்த் தேன். வாட்ட சாட்டமான உருவம். அவரைச்சுற்றி ஒரு வாலிபப் படை. அவரைப்பற்றிச் சிறு பிள்ளையிலிருந்தே நான் கேள்விப்பட்டிருந்த கதைகளெல்லாம் அப்போது என் மனக் களத்தில் அணிவகுத்து நின்றன. செல்வத் தாலும் செங்களத்தில் போராடி ஜெயம் பெற்றதாலும் புகழ் சேர்த்துக் கொண்டவர்களின் தனிப்பட்ட கெட்ட குணங்களை மறைத்து வைப்பதையே பெருந் தொண்டாக நமது தேசம் கருதிக்கொண்டு வந்திருக்கிறது. அது போலவே வைரமுத்தரின் வீரப் பிரதாபங்களுள் அவரு ைடய வீம்பும், வெறிக் குணங்களும் புதையுண்டு போயி ருந்தன. அஞ்சாத நெஞ்சுடையவர், அபக்கியாதி சிறிதும் பெற்றறியாதவர், அடலேறு வம்சத்தின் முன்னேடி என் றெல்லாம் பாகனேரி நாட்டிலேயே பலர் புகழ்வார்கள் வைரமுத்தரை! அந்தப் புகழ்மாலையின் நறுமணத்தில் மயங்கிப் போனேன் !

நான் மட்டுந்தான ? என்னைப் பார்ப்பதற்கு மாதக் கணக்கில் எதிர்பார்த்து இருந்தவரைப் போலல்லவா அவர் விழிகள் என்மீது மொய்த்துக்கிடந்தன நடந்து கொண்டே அவர் திரும்பித் திரும்பிப் பார்த்தார்; நான் நின்று கொண்டே தலைகுனிந்து குனிந்து நிமிர்ந்தேன். நமது வண்டியில் கட்டியிருந்த முன் திரையில் எழுதப் பட்டிருந்த நமது வீட்டு விலாசம் என்னை வாளுக்கு வேலியின் தங்கச்சி என்று அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அந்த ஒருநாள் சந்திப்பு என் வாழ்வையே கருக்கி விடும் என்பதை நான் எப்படி உணரமுடியும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/15&oldid=565929" இலிருந்து மீள்விக்கப்பட்டது