பக்கம்:செம்மாதுளை .pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

சமமான அந்தஸ்து, இணையுள்ள ஆள்கட்டு என்று எண் னித்தான் நீங்களும் ஒப்புதல் தெரிவித்தீர்கள். ஆனால், பழி தீர்த்துக் கொள்ளத்தான் பட்டமங்கலத்தார் பாச வலை வீசினர். பாகனேரியில் பெண்ணெடுத்தார் என்பது. இப்போதுதானே புரிகிறது! -

நான் கொலு வைத்து விளையாடிய காலத்திலேயே "கல்யாணி மீது யாரும் சுடு சொல் வீசக் கூடாது" என்று கட்டளை பிறப்பித்திருந்தீர்கள். அனல் முச்சுப் பட்டாலும் வெந்து போகும் அனிச்சம்பூ போன்ற என் மனம் இப்போது பட்டமங்கலத்தில், படும் துய ரத்தைப் பார்த்தால் உங்களது வைர நெஞ்சு எப்படிக் கொதிக்கும் என்பதை என்னுல் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. கூந்தலைப் பிய்ப்பதும், குமட்டில் இடிப்பதும், கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதும் இங்கே தினசரிக் கூத்தாகி விட்டன; -

வாய்க்கு ருசியாகச் சமைக்கத் தெரிவில்லையாம் எனக்கு. வாளுக்கு வேலி தங்கைத.னே-கூழுக் காய்ச் சித்தானே பழக்கப்பட்டிருப்பாய்! நாலுவகைக் கறி சமைத்து நல்ல கஞ்சி குடித்திருந்தால் தெரியும்' என்று இடித்துப் பேசுகிருர். எப்படிச் சகிப்பேன் இதையெல் லாம் ? முடியுமா என்னல் ? பாற் சோறும், பழச்சாறும் நாங்கள் போடும் பிச்சை உணவு என்று பதில் சொன்னல் கணவனை எதிர்த்துப் பேசுகிருள் என்று சமுதாயம் பழிக்கும்.’’ -

-இந்த இடத்தில் படிக்கும்போது தேவனின் கண்கள் கொதித்தன. முகத்தைச் சுழித்து ஏறிட்டுப் பார்த்தான்கு கொந்தளித்துக் கிடந்த அவனது மனத்தின் அலை ஓசை, சிவந்து குருவி ரத்தமாகியிருந்த அவனது விழிகளில் பிரதிபலித்தது. ஒருகணம் சிலையாக நின்ருன். பின் ஒலை. யைத் தொடர்ந்தான் : ... . . -*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/16&oldid=565930" இலிருந்து மீள்விக்கப்பட்டது