பக்கம்:செம்மாதுளை .pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

'ஏதோ ஒரு ரகசியத்தை மனதில் மறைத்து வைத் துக் கொண்டுதான் வைரமுத்தர் நம் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிருர் என்றே எனக்குப் படுகிறது. இல்லாவிட்டால் பாகனேரி மஞ்சுவிரட்டைப் பற்றியே ஏன் அவர் அடிக்கடி கிண்டிக் காட்ட வேண்டும். அதில் என்னதான் நடந்ததோ ? சிறுமி நான்! நமது தொழில் வம்புச் சண்டைக்கு வருவதுதான் என்கி முர், ஏச்சை யும் பேச்சையும் தாங்க முடியாமல் வீட்டின் எங்காவது ஒரு மூலையில் அழுது கொண்டிருந்தால் ஓடி வந்து மிதிக் கிருர்; கிள்ளுகிருர் !

இப்படித்தான் போன வெள்ளிக்கிழமை ஒரு தகராறு நடந்தது. என்னை எவ்வளவு வேண்டுமானலும் பேசுங் கள்; என் அண்ணனைப் பேசாதீர்கள்' என்று என்னையும் அறியாமல் சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்! பல்லைக் கடித்துக்கொண்டு கையிலிருந்த திறவுகோலை எறிந்தார். என் கன்னத்தில் ஒரு ரத்தக் காயம் ஏற்பட்டுவிட்டது. அந்த வடு இன்னும் காயவில்லை."

இப்போது தேவனுக்குச் சந்தேகம் தீர்ந்துவிட்டது. கன்னத்தில் வடு என்று கவுதாரி சொன்னது அவனே உறுத்திக் கொண்டிருந்தது. கல்யாணிதான் ஆண் வேடத் தில் வந்திருக்கிருள் என்று தேவன் தீர்மானித்துக் கொண்டான்

அன்று இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. எப் படித் தூங்குவான் ? ஊசிமுனை யளவு கவுரவத்திற்கு மாசு ஏற்பட்டாலும் எண்ணி எண்ணி உடலை வருத்திக் கொள் ளூம் கள்ளர் குலத்தின் தீபச் சுடராக விளங்கிய வாளுக்கு வேலி, தன் தங்கைக்குத் தீராத மனவேதனை என்பதை அறிந்த பிறகு, அவன் மனம் துயில் கொள்ள எப்படித் துணியும் ? - • "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/17&oldid=565931" இலிருந்து மீள்விக்கப்பட்டது