பக்கம்:செம்மாதுளை .pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

இரவு விழிப்பும், இடைவிடாத சிந்தனையும் தேவன் முகத்தில் எண்ணெய் படியச் செய்தன. ஒ லை ைய ச் சுருட்டி இடுப்பில் செருகிக்கொண்டு உலாத்த ஆரம்பித் தான் பாகனேரிக்கும் பட்டமங்கலத்திற்கும் பலமுறை போய்த் திரும்பும் தொலைவு, அன்று இரவு தேவன் உலாத்தியிருக்கிருன். நேரம் போனதே அவனுக்குத் தெரிய வில்லை; எண்ணமெல்லாம், கல்யாணியின் துயரை எப். படித் தீர்ப்பது என்பதிலேயே பின்னிக் கிடந்தன. வாளுக்கு வேலியின் பழக்கமான குணம், வைரமுத்தனைத் தீர்த்துக் கட்டிவிடத் தூண்டியது. ஆனல் கல்யாணியின் விதவைக் கோலம், சினந்து திரளும் அவனது தசைக் கட்டிகளைச் சாந்தப் படுத்தியது. பாவம், எந்த முடிவும் காணு. மல் அயர்ந்து போய், கயிற்றுக் கட்டிலில் சாய்ந்தான்.

"கட்டுச் சண்டைக்காக தேவன் வளர்த்து வந்த வெள் ளைச் சேவல் கூவியது! விடியப்போகிறது என்று அப்போது தான் தெரிந்துகொண்டான் தேவன்.

சிடுசிடுத்த முகத்தோடு கீழே இறங்கி வந்தான். களைப் பும் கோபமும் இருமுனைத் தாக்குதல் நடத்தி, தேவனின் முகப்பொலிவையே மாற்றி வைத்திருந்தன. கவுதாரியும், சின்னக் கோழியும் அப்போதுதான் தோட்டத்துப் பக்க மாய் போய்விட்டு, முகப்புக்கு வந்து கொண்டிருந்தார்கள். தேவன் இறங்கி வந்ததைக் கண்டதும் கவுதாரி அவனருகில்: வந்து இன்னுெரு ஒலைச் சுருளைக் கொடுத்தான்: -

கேள்விக் குறிகள் முற்றுகையிட்ட முகத்தோடு தேவன் அந்த ஒலையைப் பிரித்தான் கல்யாணியை வைர. முத்தன் அங்கஹனம் செய்து விடுவானே என்ற கவலை. தான் வாளுக்கு வேலிக்கு! ஆனல் ஒலையில் என்ன எழுதப் பட்டிருந்தது :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/18&oldid=565932" இலிருந்து மீள்விக்கப்பட்டது