பக்கம்:செம்மாதுளை .pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

ராப் போட்டான். அதன்படி பட்டமங்கலம் கருமயிலை பச்சைக் கொடி கட்டி, பல்லாயிரக் கணக்கான வாலிபர்

களின் ஊடே ஊடுருவிப் பாய்ந்தது. வரட்டும் பார்க்

கிறேன் என்று கச்சை கட்டி நின்ருேர்கூட காளையின் கம்பீ

ரத்தைப் பார்த்து, அவர்களையும் அறியாமல் சந்தோஷ ஆர வாரம் செய்யத் தொடங்கினர்கள். காளே, வெற்றியோடு களம் தாண்டிக் கண்மாய்கள் கடந்து பட்டமங்கலம் திசை

நோக்கிப் புறப்பட்டது.

வாளுக்குவேலி மஞ்சு விரட்டுக்கு வராமலில்லைவந்திருந்தான் தட்டு வண்டியில்: வைர ஊசி என்று பலரால் அழைக்கப்பட்ட பந்தய மாடுகளைப் பூட்டிக்கொண்டு சிருவயலுக்கு வந்திருந்தான்: வைரமுத்தனின் காளை பச்சைக்கொடி கட்டி வரப்போவதும் அவனுக்குத் தெரியும். தமிழ் நாட்டு வாலிபர்களைத் துடிப்புள்ள அந்தக் காளை துச்சமென மதித்து வருவதையும் அவன் நெடுநாட்களாக அறிவான். ஆனாலும் என்ன செய்வது சிலம்பாட்டத்தில் கை பிசகி நரம்பு விலகி முட்டைத்தோல் போர்த்திய கையோடு வாளுக்கு வேலி மஞ்சுவிரட்டுக்கு வந்திருந்தான். தண்டோராச் செய்தியைக் கேட்டான் துடித்தான். தேவனுடைய வாழ்நாளில் கண்டிராத அவமானமென்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான் நொண்டிக் கையோடுகூட பார்க்கிறேன் ஒரு கை'யென்று பத்தடி தூரம் தாவி ஓடி வந்தான். அருமைத் தம்பி கரியான் என்ற கருத்த ஆதப்பன் வழி மறித்து அண்ணனை மீட்டிப் பார்த்தான். அதுவரை தம்பியின் சொல்லைத் தட்டியதே. கிடையாது. ஆனல் அன்று அவன் சொல்லையும் மீறி மாடு வரும் திக்கை நோக்கிக் கிளம்புவதற்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தான் தேவன். -

மனிதனுடைய இதயம் எப்படியோ அன்புக்கு மட்டும்

கட்டுப்பட்டுவிடுகிறது. சக்தியற்றவர்கள்கூட தன்னை அவமானப்படுத்தும் சவாலுக்குப் பதில் கூறத் துணிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/21&oldid=565935" இலிருந்து மீள்விக்கப்பட்டது