பக்கம்:செம்மாதுளை .pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

விடுகிரு.ர்கள். ஆனல், நல்ல எண்ணத்தோடு கூடிய அன்புச் சவால், தோள் தட்டிக் கிளம்புவோரையும், வாள் துக்கி வரிப் புலிகளாக மாறுவோரையும், சாந்தப்படுத்தும் மாய' சக்தி அன்பிடம் தானிருக்கிறது. இல்லாவிட்டால் அறிமுக மாகாத ஒரு பெண் குறுக்கிட்டு தேவனைத் தடுத்தவுடன் அவன் தன் முயற்சியைக் கைவிடுவான? ஆம், சினந்து கிளம்பிய தேவன் வாளுக்குவேலியை அவனுடைய வண்டிக்குப் பக்கத்தில், வண்டியை அமர்த்திக்கொண்டிருந்த ஒரு இளம் பெண் குறுக்கிட்டு, கெஞ்சிக் கேட்டுக்கொண்ட தற்காகச் சாந்தம் பெற்று மாட்டைப் பிடி க்க வேண்டு மென்ற வைராக்கிய எண்ணத்தை ஒத்தி வைத்தான். சூழ்ந்து நின்றவர்களுக்கு இந்தச் சம்பவம் பெருத்த வியப்பைக் கொடுத்தது.

முன்பின் பார்த்திராத அந்தப் பெண் யார்? அவனுக்கே தெரியாது. ஒரு அழகான பெண்-அதுவும் நாடறிந்த வாளுக்குவேலியை நெருங்கி மன்ருடிக் கேட்டுக்கொள்ளு கிருளே என்ன காரணம்? இந்தச் சந்தேகம் தேவன் இதயத்தையும் குழப்பிக்கொண்டிருந்தது. தமிழ் நாட்டுத் தாய்மார்களுக்குள்ள பொதுவ்ான இரக்க சிந்தை என்று முடிவு கட்டுவதற்கும் தேவனுக்கு மனம் வரவில்லை. எங்கோ பழகிய ஒரு வாசனை அந்தப் பெண்ணிடமிருந்து வந்து கொண்டிருந்தது. கடந்துபோன நிகழ்ச்சிகளை யெல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்து பார்த்தான் தேவன். பக்கத்தில் நின்ற வண்டியைப் பார்த்தான் பேர்பெற்ற திருப்புத்துரர் வில் வண்டி அது. வண்டித் திரைகளைப் பார்த் தான். நீலப்பட்டுத் துணியில் மாதவன் துணை' என்று எழுதப்பட்டிருந்தது. புரியவில்லை தேவனுக்கு.

அந்தப் பெண் தன்னையும் அறியாமல் உந்தப்ப உணர்ச்சியின் செயலாக எப்படியோ தேவனைத் து நிறுத்திவிட்டோம் என்ற பெருமிதத்தோடு நேரத்தில் வெட்கத்தோடும் வண்டிக்குள் அமர்ந்து

  • 驚蒙。 - 2016–2

تا.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/22&oldid=565936" இலிருந்து மீள்விக்கப்பட்டது