பக்கம்:செம்மாதுளை .pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

களே அவிழ்த்துவிட்டாள். ஆனலும், அவளுடைய பளிங்கு விழிகள் இடைவெளியின் வழியாகத் தேவனையே வட்ட மிட்டன என்பதை அவன் அறியவில்லை. களங்கமில்லாத வீர உள்ளம்!

சிருவயலில் தை மாதம் ஆரம்பித்த வேட்கை, தேவனின் உள்ளத்தில் தினந்தோறும் கூடுகட்டிக் கொண்டேயிருந்தது. ஆனி மாதம் பிறந்ததும் பட்டமங்கலத்துக் கருமயிலைக்கு, பாகனேரி மஞ்சு விரட்டுக்கு வரும்படி பாக்கு வைத்தான். தமிழ் நாட்டில் அது ஒரு முறை. மாடுகூட அழைத்தால் தான் வரும்! அதன்படி வைரமுத்தன் பாகனேரி மஞ்சு விரட்டுக்கு வந்திருந்து, பச்சைக் கொடியுடனேயே காளையை அவிழ்த்துவிட்டான். காளை, மைதானத்தின் ஒரம் வருகின்ற வரையில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அமைதிபெற்று, மஞ்சு விரட்டு கோரிக்கைகளில் பங்கு பெற்ருன், வைரமுத்தன். எந்த மஞ்சு விரட்டுக்குப் போனலும் வைரமுத்தன் பத்து சதை துண்டு, மணிக்கொத்து, நெற்றிப்பட்டயம் இவைகளுக்குக் குறையாமல் கொண்டுவருவான். மாடு பிடித்துப் பேர் பெற்றவர்களில் அவனும் ஒருவன். அந்த வெற்றி பாகனேரி யிலும் அவனுக்குக் கிடைத்தது. மாலே ஆறு மணிக்குத் தன்னுடைய மாட்டின் பிடிக் கயிற்றைச் சுற்றிக் கழுத்திலே போட்டுக்கொண்டு, மஞ்சு விரட்டில் கிடைத்த துண்டு களைத் தலையில் சுற்றியபடி பட்டமங்கலம் திரும்பினன். அங்கே அவனுக்கு ஒரு சோகச் செய்தி காத்திருந்தது .

பத்து ஆண்டுகளாக வைரமுத்தனுடைய கீர்த்தியைப் பாடி வந்த கருமயிலைக் காளே, பாகனேரி மஞ்சு விரட்டில் ஊருக்குக் கடைசியில் பிடிபட்டு விட்டதாகப் பட்டமங்கலத் தின் முகப்பிலேயே அறிந்தான். அவன் முகத்தில் ஈயாட வில்லை. ஒரே குழந்தையைச் சாகக் கொடுத்தவனைப்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/23&oldid=565937" இலிருந்து மீள்விக்கப்பட்டது