பக்கம்:செம்மாதுளை .pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

ஒடோடி வந்தான் வீட்டுக்கு! தாயார் மாணிக்கவல்லி தாங் கொணுத் துயரத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தாள். வீட்டின் வாசற்படியில் சொட்டுச் சொட்டாக ரத்தம் வடிந் திருந்தது. வீரன் வந்து விட்டான என்று கேட்டுக்கொண்டு வைரமுத்தன் உள்ளே நுழைந்தான். பேச முடியாத நிலை யில் விக்கலுக்கும் விம்மலுக்குமிடையே அந்த வயோதிகத் தாய், மாட்டுக் கொட்டத்தைக் கை நீட்டிக் காண்பித் தாள். தாங்க முடியுமா அவளுல்! அவனுடைய வீரன், மணி யிழந்து, ஒளிவீசும் நெற்றிப் பட்டயம் இழந்து, பச்சைக் கொடியையும் இழந்து, கருநாகத்தைப் போன்ற வாலையும் அல்வா இழந்து வந்திருக்கிருன்! எப்படித் தாங்கு வான் வைரமுத்தன்? கால்வாய்ச் சண்டைகளுக்கே கழுத்தைத் துண்டித்துவிடக் கிளம்பும் முன் கோபி, தன்னுடைய கண்ணின் கருவிழி புண்ணுக்கப்பட்டு வந்துள்ளதென்முல் சகிப்பாளு கள்ளர் குல வாலிடன்! ஆளுல் சகித்துக்கொண் டான்; நீதிக்குக் கட்டுப்பட்ட தமிழ் மறவர் குலத்தில் பிறந்தவனல்லவா அவன்!

o

வாளுக்குவேலியினுடைய வேட்கை அடங்கியது. காளையைப் பிடித்தோம் என்ற வெற்றிச் செய்தியை வைர முத்தனுக்குத் தெரிவித்தான். வாலிபப் பட்டாளத்தையே ஏளனம் செய்து வந்த அந்தக் காளையினுடைய வாலே அடிக்கடி பார்த்துப் பார்த்து வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். வாலேப் பார்க்கும்போது எல்லாம் இன்னுெரு உருவம் அவன் மனக் கண்முன் தோன்றித் தோன்றி மறைந்தது. யார் அந்தப் பெண்? பலபேர் முன்னிலையில், சிருவயல் பொட்டலில் எப்படித் துணிந்து என்னைத் தடுத்தாள்? ஒரு வேளை கல்யாணிக்குத் தெரிந்தவளோ? --இப்படி யெல்லாம் தேவன் நினைத்தான். முடிவு காணமுடியாத அவனுடைய ஏக்கத்தை, காளையை மடக்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சி மறைத்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/24&oldid=565938" இலிருந்து மீள்விக்கப்பட்டது