பக்கம்:செம்மாதுளை .pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளுடைய மின்னல் விழிகள் பரிவு காட்டும்-என்று மற்றவர்கள் மத்தியில் பரிசுத்த நாடகம் நடத்திக் காட்டி விட்டு, பகலவன் அழகர்மலைச் சரிவுக்குப் போய்விட்டாளு? பாவை பவள் முத்து மீன காத்திருப்பாளே என்று துடிக்கும் பகல் யோக்யர்கள் அப்போது திருக்கோஷ்டியூரில் மலித் திருந்தும் அவர்களில் எவரும் சுந்தராம்பாளைப் பற்றிப் பேசுவதில்லை. பேச என்ன இருக்கிறது? பேசிளுல் அவளது அடக்கத்தைப் பற்றிப் பேசவேண்டும்; அவளுடைய தயாள சிந்தையைப்பற்றிப் பேசவேண்டும்; சேற்றில் முளைத்த செந்தாமரை என்று புகழவேண்டும்! நாற்றம் பிடித்த நடத்தைகளில் நாமத்தைப் பறிகொடுத்திருந்தால் தானே நாலுபேர் அவளைப் பற்றிப் பேசமுடியும்; காலேயரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலர்ந்து தோன்றும் குணமுடைய பருவத்தின் எழுச்சியைக்கூட அடக்கி அடக்கி அயர்வு பெறும் நிலை பெற்றவள் சுந்தரி. பேச்சுப் பெட்டி’ களின் வாய்வீச்சுக்கு அவள் ஏன் பவியாகப் போகிருள்! ஊரிலே உள்ள மற்றப் பெரிய மனிதர்களுக்குக் கிடைத்த அந்தஸ்து அவளுக்கும் கிடைத்தது. மிட்டா மிராசு களுக்குத் தரப்பட்ட மரியாதையைப்போல், மிரட்டி வாழும் முரடர்களுக்குக் காட்டப்படும் பயபக்தியைப் போல், உள்ளுர் வாசிகள் சுந்தரிக்கும்தான் கெளரவம் கொடுத்தார்கள். ஊருக்குள் ஒரு சடங்கு என்ருலும், மெழுகுச் சீலே போர்த்தி முன்திரை பின் திரை போட்ட வில் வண்டியில் வந்து மெல்லிய முக்காடுடன் அவள் இறங்கிப் போவதே ஒரு அலாதியாகத்தானே இருந்தது.

சந்தனக்கல் நெற்றியிலிருக்கும் ஜவ்வாதுப் பொட்டும். அந்தியில் மலர்ந்த அடுக்கு மல்லிகைப் பூவும் கடைவீதி மக்களுக்குச் சுந்தரியின் வரவு கூறி பராக் சொல்லும் முன்னோடிகளாக இருந்தன. அவளுடைய வண்டி க.ை விதி வழியாகப் போகிறதென்ருல் தராசு பிடித்திருக்கும் கைகள்கூட வலிவிழந்து சோர்ந்துவிடும். குலத்திலே தாசி தான் என்ருலும் இவ்வளவு கீர்த்தியை எப்படித்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/37&oldid=565951" இலிருந்து மீள்விக்கப்பட்டது