பக்கம்:செம்மாதுளை .pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

சம்பாதித்தாளோ? வசதி பெற்ருேர்கூட வளமான எண்ணப் பஞ்சத்தால், சாவதற் கென்றே பிறந்தவர்களாகி

விடுகிருர்கள்; நுண்ணறிவு கொண்டவர்களும் ஊமைத் தனத்தால் என்ன மனிதர் இவர் என்ற பட்டத்தைப் பெற்றுவிடுகிருர்கள். ஆனல் சுந்தரி? செல்வமும் நிறைந்

திருந்தது! அவளிடம், செல்வாக்கும் வளர்ந்திருந்தது பட்

டயமில்லையே தவிர திருக்கோஷ்டியூருக்கு அவள் பட்டத்

தரசியேதான் ! ஆனால் அவள் முகத்திலே அடிக்கடி ஒரு

சோகக் குறி தென்படுகிறதே ஏன் என்பதை மட்டும்

யாரும் கவனிக்கவில்லை:

  • ,章 峰

அன்றைய தினம் சுந்தரி முகங்குளிரக் காணப்பட்டாள்: அவள் உடுத்திய நீல வர்ணப் புடவை மேகத்தைக் கிழித்துப் டவையாக்கியது போலிருந்தது. தேக்குமர ஊஞ்சலிலே ரத்தினக் கம்பளம் விரித்திருந்தது. உத்திரத்தில் இணைக்கப் பட்டிருந்த ஊஞ்சல் சங்கிலியை நீண்ட பூச்சரம் இறுகப் பின்னிக் கிடந்தது. சந்தனக் கிண்ணம், பன்னீர்ச் செம்பு, வெற்றிலைப் பெட்டி இவை மூன்றும் ஒரு வெள்ளித் தட்டில் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உதடுகளில் இளங்காவி படிய, உலர்ந்த கூந்தலைக் கோதியபடி அந்தச் சலவைக்கல் கூடத்தில் உலாத்திக் கொண்டிருந்தாள் சுந்தரி. வீடு தேடிவரும் ஜமீன்தார்கள், தனவணிகச் சீமான் களுக்குக்கூட சுந்தரி இப்படிப்பட்ட விமரிசையான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்யமாட்டாள். அன்று அவளுடைய மாதவ மாளிகை அவ்வளவு சிறப்பாக அலங் கரிக்கப்பட்டிருந்தது. சுந்தரி, ஜன்னல் வழியாகத் தெரு வைப் பார்ப்பதும், பின் முகத்தைச் சுழிப்பதுமாகவே இருந்தாள். இந்தப் பாட்டி எப்போதும் இப்படித்தான். போனேம் வந்தோம் என்று எந்தக் காரியத்தையும் முடிப்ப இல, ஆளைத் தவிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதிலே கிழம் கட்டைகளுக்கு என்னதான் சுகம் இருக் கிறதோ, சனியன்!" என்று பொடு பொடுக்க ஆரம்

2016–3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/38&oldid=565952" இலிருந்து மீள்விக்கப்பட்டது