பக்கம்:செம்மாதுளை .pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பித்தாள். அப்போது சமையல்காரி சிலம்பி உள்ளே வந்தாள்.

'பசுவம் பாலை என்ன செய்யறது மகளே! என்று பரிவாகக் கேட்டாள். ஏழைகளுக்கு வசதியுள்ள இடத்தில் வேலை கிடைப்பதே கடினம். அப்படிக் கிடைத்து விட்டாலும் எசமானர்களின் முகபாவமறிந்து பேசும் முகஸ் துதிக் கலையில் அவர்கள் எப்படித் தேற முடியும்!

ஏக்கம் பிடித்த உள்ளமும், எதிர்பார்த்து ஏமாந்த விழிகளும் சுந்தரியை உருமாற்றி இரண்டு நாழிகைக்கு மேலாகிவிட்டது. அந்த வேளையில் வந்த அவளுடைய அன்பிற்குரிய வேலைக்காரி சிலம்பி மீது, கடித்துத் தின்னும் பாவனேயில் பேசிளுள் யாருக்கோ பிரியமாக வாங்கிவரச் சொன்ன பாலை, அடுப்பில் ஊற்றித் தொலை என்று அதிர்வேட்டுப் போட்டதுபோல் பதில் சொல்லி அனுப் பினுள் நெஞ்சு நிறைந்த ஆசை, சற்று நேரம் தாழ்த்தி நிறைவேறுவதைக்கூட மனித ஜாதி பொறுப்பதில்லை. வலி மைக் குறைவால் ஏற்படும் தோல்விக்குப் போலிக் கார னங்களைச் சொல்லி மனச் சாந்தி பெற்றுக் கொள்கிருர் கள்; எடுத்த காரியத்தில் வெற்றி பெறச் சக்தியிருந்தும் முறையான செயல் முறைகளைப் பின்பற்ருததால் ஏற் படும் தோல்விக்குச் சாந்தி சொல்லிக் கொள்ள மறுத்து விடுகிருர்கள்: மாருக, பாய்கிருர்கள்: பல்லேக் கடிக் கிரு.ர்கள்; நேத்திரம் கொதிக்கிறது; நெஞ்சு நெருப்பாகி விடுகிறது.

போன கிழவி வரவில்லையே என்று பொறுமினுள் சுந்தரி. அந்தி சிவந்து அம்புலியும் வந்துவிட்டதே என்ற கவலை அவளுக்கு நேரம் செல்லச் செல்ல நம்பிக்கை பிரிந்துகொண்டு வந்தது. சிலம்பியைக் கூப்பிட்டுப் புதிய சமையல் எதுவும் செய்யவேண்டாம் என்று சொல்வதற் காகச் சமையலறைக்குப் போளுள். அங்கே பால் முறுகி நெய் வாடை மூக்கைத் துளைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/39&oldid=565953" இலிருந்து மீள்விக்கப்பட்டது