பக்கம்:செம்மாதுளை .pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

‘பைத்தியத்தை எப்படிப் படைத் தலைவராக அனுப் பினர்கள் ?-சுந்தரி கிண்டலும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள்.

"பைத்தியமா ? இல்லை இல்லை! பழரசம் சாப்பிட்டா து ரைக்கு......'

"......பைத்தியம் பிடித்துவிடுமோ ?”

"உங்க மாதிரி யாராவது பக்கத்திலேயே இருக்கணும். அது எங்க துரைக்கு பழக்கமாகிப் போச்சு: ஊர் ஊருக்கு இதுதான் எங்களுக்கு வேலை.”

இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு முரட்டுக் கரங்கள் அந்த இரண்டுபேருடைய புரடிகளையும் அழுத்திப் பிடித்தது. வெள்ளேக்காரர்களின் வேலைக்காரர்களைக் காட்டிலும் சுந்தரிதான் அதிகம் பயந் தவள். போனவர்களைக் காணவில்லையே என்று அந்தப் பொல்லாத வெள்ளைத் துரையே வந்து விட்டானே என்று துடித்துப் போளுள். யார் அந்த மூன்ருவது ஆசாமி என்று கூடப் பார்க்காமல் முகத்தை மூடிக்கொண்டே மாடத் திற்கு ஓடிவிட்டாள் கீழே அந்த முரட்டு உருவம் வெள் ளைக்காரனின் எடுபிடிகளை மிரட்ட ஆரம்பித்தது.

ஏண்டா நீங்களும் தமிழர்கள்தான ? :

"ஆமாங்க! என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க ? எங். கப்பாதான் இராமநாதபுரம் சேனபதிப்பிள்ளை அவுங்கப் பாதான் இருக்காரே அவுருதான் எங்க துரைக்கி குதிரை யெல்லாம் கொள்முதல் பண்ணிக்கிட்டு வர்ர வர்ணக் குமாரு பிள்ளை-அவர்களில் ஒருவன் இப்படி அளந்து கொண்டே போனன். -

- "துரோகந்தான் செய்யத் துணிந்தீர்கள்: கொஞ்சம் வீரமாகவாவது துரோகம் செய்யக்கூடாதா? மறத்தி வயிற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/41&oldid=565955" இலிருந்து மீள்விக்கப்பட்டது