பக்கம்:செம்மாதுளை .pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

வுக்கு வருவதில்ல்ை பெண்கள் அப்படியில்லை: மனதுக்குப் பிடித்ததில் ஊன்றிக் கவனம் செலுத்துவார்கள். அதையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். வேண்டாததற்கும் தெரி யாததற்கும் அவர்கள் மனதில் இடமே கொடுப்பதில்லை'சுந்தரி ஆடவர்களிடம் இப்படி மனதுவிட்டுப் பேசி மூன்று வருஷங்களுக்கு மேலாகிவிட்டன. பிறரிடம் பிரியம் காட்டு வதற்கே பயந்துபோய், பட்டுத்துணிக்குள்ளேயே மூடிக் கிடந்தவளல்லவா அவள் ? அதே போலத்தான் தேவனும். இளம் பெண்களிடம் அவன் நெருங்கிப் பழகியதே இல்லை. அவனைச் சுற்றிப் பரவிக்கிடந்த செல்வாக்கு, அவனுக்குப் பயம் காட்டிக்கொண்டே இருந்தது. முறையாகச் சம் பாதித்த புகழை இழந்துவிட மனமில்லாது, உள்ளத்திலே மூண்டெழும் ஆசைகளை வெதும்ப வைப்போரில் தேவனும் ஒருவன். அதனுல்தான் சுந்தரியின் பருவப் பணி மண்டலத் தில் அகப்பட்டுக்கொண்டு தவித்தான். சிவகங்கைச் சீமை யில் சுந்தரியின் அழைப்பு யாருக்கும் கிடைத்ததில்லை: யாரையும் அவள் பொருட்படுத்தியதில்லை. விரக்தி ஏற் பட்டவளைப் போல அவள் காணப்பட்டாலும், அவளுக் கென்ன உள்ள அந்தஸ்தை விட்டுக்கொடுக்கவில்லை.

இருவருக்குமிடையே சிறிது மெளனம் நிலவியது: விழி இரண்டு நிலம் நோக்கும்போது எதிர் விழிகள் எழில் நோக்கின.

வந்ததிலிருந்து நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். என்னல் நினைவுக்குக் கொண்டுவர முடிய வில்லை.’’

"நான் சொல்லட்டுமா என்று செர்ல்லி, ஜன்னல் திரையை நீக்கிவிட்டு, கோயில் கோபுரத்தில் ஏற்றப் பட்டிருந்த விளக்கெண்ணெய் தீபத்திற்கு ஒரு நமஸ்காரம் போட்டாள். சுந்தரி ஜன்னல் திரையை நீக்கியபோது தேவனுக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. ஜன்னல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/44&oldid=565958" இலிருந்து மீள்விக்கப்பட்டது