பக்கம்:செம்மாதுளை .pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

தத்தைக் காட்டிலும் சிவப்பேறியிருந்த அவளுடைய வில்லை நகங்கள் ரத்தினம் பதித்தாற் போலிருந்தன. தேவன் நடுக்கத்துடன் எழுந்து சென்று மூடியிருந்த பொற்கரத்தை எடுத்தான். கண்மையும் கண்ணிரும் கலந்து முகத்திலே கரி நீரைப் பூசியிருந்தன. முன் பின் பழகி யிராத தேவனுக்கு எதிரே அவள் ஏன் அழுகிருள்? இரண் டறக் கலந்து விட்டவளைப் போல் நடந்து கொள்கிருளே. தேவனும் தொட்டுப் பழகி, தோளோடு சேர்த்துக்கொள் கிருனே என்ற சந்தேகமும் வியப்பும், ஒளிந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த வேலைக்காரி சிலம்பியை மூக்கில் விரல் வைக்கத் தூண்டின.

புரியவில்லை சுந்தரி, வலிய அழைத்தாய் வந்தேன். பொறுமிப் பொறுமி அழுகிருயே! கண்ணிரைக் காணவா காட்டாற்று வெள்ளத்தையும் கடந்து வந்தேன்! கதை யென்ன நடந்தது? சொல்லு, களைந்தெறிகிறேன் ஆபத்தை. கோட்டையைப் போல் வீடு, கோமகளைப்போல் வ ழ்வு! நாட்டையாளும் ராணி போல் அழகு! உனக்கென்ன துக்கம்!' -தேவன் அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டே ஊஞ்சலுக்கு வந்து அமர்ந்தான். அவன் மடி. 'யில் அந்த இளங்கொடி சாய்ந்து கிடந்தாள்.

- சுந்தரி!'

இ...ம்:

கொஞ்ச நேரத்திற்குள் என் குலையையே துடிக்க வைத்து விட்டாயே!”

துயரத்தைச் சொல்லிச் சுமையை இறக்கிக்கொள்ள எனக்கு யார் இருக்கிரு.ர்கள்! மூன்று வருஷங்களாகத் தேடித் தேடிப் பார்த்தேன். தோற்றமிருக்கிறவர்களுக்குத் துணிவு இல்லை. துணிவு பெற்றவர்கள் கூன் குருடர்களாக இருக்கிருர்கள்' என்று பேசிக்கொண்டே தன் முகத்தைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/46&oldid=565960" இலிருந்து மீள்விக்கப்பட்டது