பக்கம்:செம்மாதுளை .pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தேவன் மடியில் புதைத்துக் கொண்டாள். தேவன் அவள் முகத்தைத் திருப்பினன். ஜவ்வாது இளகி நெற்றி முழுக்க ஒடியிருந்தது:

'உன்னைப்பற்றி இந்த ஊரார் என்னதான் நினைக்கி முர்கள்?" r

'நல்லவள். கேட்கும்போதெல்லாம் நன்கொடை தரு வாள் என்று நினைக்கிருர்கள்!'

"நல்லவள் என்ற பட்டம்தானே பெண்களுக்குத் தேவை. அதைப் பெறமுடியாமல் எத்தனை பெண்கள் சரு காகிப் போயிருக்கிரு.ர்கள்!"

"நல்லவள் என்ற பெயர் போதுமா? வாழ்க்கை வேண் டாம்ா கெட்ட நடத்தைக்காரர்கள் கூட மற்றவர்களி டம் நல்ல பெயர் வாங்கிவிடலாம். ஆனல், வாழ்க்கை என்பது நம்மை நாமே சோதித்து அனுபவித்து முடிவு கண்டு கொள்வதாயிற்றே:- சுந் த ரி பேசும்போது தொண்டை அடைத்து அடைத்துத் திறந்தது.

"நீதான் வாழப் பிறத்தவள், உன்னிடம் தான் உலகம் மண்டியிட்டுக் கிடக்கிறது என்று நினைத்தேன். பார்க்கப் போளுல் நீ எதையோ பறிகொடுத்து ஏமாந்து போயிருக் கிறவள் போலல்லவா தோன்றுகிறது'-தேவன் அவளு டைய கூந்தலைக் கோதிக் கொண்டே பேசினன். அப்போது சுந்தரியின் முகம் கீழ்த்திசை அடிவானம்போல் அரைச் சிவப் பேறி பளிங்கு போலிருந்தது. பெண்கள் அழும்போது சிரித்தால், மகிழ்ந்தால், புன்னகை செய்தால் முகத்திற்கு எழில் கூடிவிடுகிறது. உதட்டிலே பிறக்கும் சிரிப்புக்கு முகத்தை மாற்றும் சக்தியில்லை. உள்ளத்திலே பிறக்கும் சிரிப்புக்குத்தான் அது உண்டு. \ - - -

பசுந்தரி சொல் சுந்தரி உனக்குத் திங்கிழைத்தவர்கள் யார்? உன் வாழ்க்கையை அலங்கோலப்படுத்தியவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/47&oldid=565961" இலிருந்து மீள்விக்கப்பட்டது